- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவின் வருண் சக்ரவர்த்தியை சமாளிக்க நியூஸிலாந்து இதை செஞ்சா போதும்.. மைக் ஹெசன் பேட்டி

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறுகிறது. அதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி நியூசிலாந்தை தோற்கடிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இதே தொடரில் லீக் சுற்றில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றது.

அந்த வெற்றிக்கு தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலைக் கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றுவார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். இந்நிலையில் துபாயில் வெற்றி பெறுவதற்கு டாஸ் முக்கிய பங்காற்றாது என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

டாஸ் முக்கியமல்ல:

குறிப்பாக ரோகித் சர்மா கடந்த 14 ஒருநாள் போட்டிகளில் ஒரு முறை கூட டாஸ் வெல்லாத போதும் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருண் சக்கரவர்த்தியை சமாளித்து பெரிய ரன்கள் குவித்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். இது பற்றி மைக் ஹெசன் பேசியது பின்வருமாறு.

“துபாய் மைதானத்தில் வருடத்தின் இந்த நேரத்தில் கொஞ்சம் அதிக பனி இருக்கும் என்று சிலர் நினைக்கலாம். அதிர்ஷ்டவசமாக அந்தளவுக்கு பனி இல்லை. எனவே டாஸ் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய பெரிய விஷயமாக இருக்காது என்பது வரவேற்கக் கூடிய விஷயமாகும். அதனால் சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் நீங்கள் யார் டாஸ் வெல்வார்கள் என்ற கவலையுடன் செல்ல வேண்டியதில்லை”

- Advertisement -

வருணை சமாளிக்க:

“சொல்லப்போனால் நீங்கள் இந்திய ரசிகராக இருந்தால் ரோகித் சர்மா கடந்த 14 போட்டிகளில் டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்துள்ளார். அதனால் நீங்கள் டாஸ் இழந்தால் தூக்கத்தின் முழு குவியல்களையும் இழக்கப் போவதில்லை. அதே சமயம் தந்திரோபாயங்கள் அடிப்படையில் பார்க்கும் போது நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதை விரும்புவார்கள்”

இதையும் படிங்க: அவர் வந்தாலும்.. சிஎஸ்கே தோனி இருக்கும் வரை.. ஆர்சிபியால் கோப்பையை தொடக் கூட முடியாது.. ரசித் லதீப்

“செமி ஃபைனலில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து பெரிய ரன்கள் குவித்து வென்றதைப் போல ஃபைனலிலும் செயல்பட விரும்புவார்கள். இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி நியூஸிலாந்து அணிக்கு முதன்மை சவாலாக இருப்பதே இவ்வாறு நான் சொல்வதற்கு காரணமாகும்” என்று கூறினார்.

- Advertisement -