இதை செய்யலன்னா பஸ்பால்க்கு முடிவுரை எழுதிடுவாங்க.. இங்கிலாந்து அணியை எச்சரித்த மைக்கேல் வாகன்

Micheal Vaughan 2
- Advertisement -

ஆஷஸ் 2025/26 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* (5) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னணியில் இருக்கிறது. அதனால் தொடர்ந்து 15வது வருடமாக இங்கிலாந்தை தங்களது சொந்த மண்ணில் தோற்கடித்த ஆஸ்திரேலியா கோப்பையை வென்றுள்ளது. மறுபுறம் பஸ்பால் அணுகுமுறையில் அதிரடியாக விளையாடும் வெல்வோம் என்று சொன்ன இங்கிலாந்து தோல்வியைச் சந்தித்தது.

அதனால் அந்த அணியின் பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் பதவி விலக வேண்டுமென்று ஜெஃப்ரி பாய்காட் போன்ற முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் விமர்சித்தனர். ஏனெனில் பயிற்சியாளராக வந்ததும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடினால் தான் வெற்றிக் காண முடியும் என்ற அணுகுமுறையை இங்கிலாந்து அணியில உண்டாக்கினார். ஆனால் அந்த அணுகுமுறையில் இங்கிலாந்து அணி பெரும்பாலும் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது.

- Advertisement -

பஸ்பால் தொடர:

அதன் உச்சமாக தற்போது ஆஷஸ் தொடரிலும் தோற்றதால் மெக்கல்லம் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென்ற விமர்சனங்கள் எழுந்தன. அத்துடன் ரவி சாஸ்திரி, ஜேசன் கில்லஸ்பி போன்றவர்கள் பயிற்சியாளராக வேண்டும் என்ற கருத்துக்களும் காணப்படுகின்றன. அந்த சூழ்நிலையில் 4வது போட்டியில் வென்ற இங்கிலாந்து 15 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் ஒரு வெற்றியைப் பெற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.

இந்நிலையில் ப்ரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக தொடர வேண்டுமெனில் கடைசிப் போட்டியில் வென்று தொடரை வெற்றிகரமாக முடிக்க வேண்டுமென இங்கிலாந்து அணியை முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அறிவுறுத்தியுள்ளார். இல்லையெனில் மெக்கல்லம், ஸ்டோக்ஸ் கையிலெடுத்த பஸ்பால் அணுகுமுறைக்கு ஆஸ்திரேலியாவில் முடிவுரை எழுதப்படும் என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

வாகன் வெளிப்படை:

“இப்போதும் கடைசிப் போட்டி இங்கிலாந்துக்கு பெரியது என்று நினைக்கிறேன். ஏனெனில் நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் 4வது போட்டியில் இங்கிலாந்து வென்றது லாட்டரியைப் போன்ற அதிர்ஷ்டமாகும். வருங்காலத்திற்காக இந்த இங்கிலாந்து அணி நிர்வாகம் கடைசி டெஸ்ட் போட்டியை வலுவாக விளையாடி வெற்றி பெற வேண்டும். 2 நாட்களில் அல்ல”

இதையும் படிங்க: இன்னும் 25 ரன்கள் போதும்.. சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – விராட் கோலி

“பென் (ஸ்டோக்ஸ்), பஸ் (மெக்கல்லம்) ஆகியோர் அடங்கிய தற்போதைய இங்கிலாந்து நிர்வாகம் தொடர வேண்டுமெனில் வரும் வாரம் பாறையைப் போல் திடமாக விளையாட வேண்டும். ஏனெனில் மெக்கல்லமை பயிற்சியாளராக தொடர வைப்பதற்கு இங்கிலாந்து அணியிலேயே பசியின்மை காணப்படுகிறது. எனவே கடைசிப் போட்டியிலும் இங்கிலாந்து துடித்தால் அவர்களிடம் நேர்மையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று கூறினார்.

Advertisement