ஆர்.சி.பி அணிக்காக மெக்ஸ்வெல்லின் இந்த பேயாட்டத்திற்கு இதுவே காரணம் – மைக்கல் வாகன் கருத்து

Vaughan
- Advertisement -

ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டர் ஆன கிளன் மேக்ஸ்வெல் ஐபிஎல்லில் கடந்த பல ஆண்டுகளாகவே பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை என்றாலும் அவருக்கான மதிப்பு இன்னும் குறையவில்லை. இந்த ஆண்டும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற தொடரில் 12 போட்டிகளில் விளையாடி அவர் 108 ரன்களை மட்டுமே குவித்தார். அந்த தொடர் முழுவதுமே அவரால் ஒரு சிக்ஸர் கூட அடிக்கமுடியவில்லை.

maxwell

- Advertisement -

அதனால் அவர் பஞ்சாப் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த முறையும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் மூன்று போட்டிகளில் 176 ரன்களை குவித்துள்ளார். அதிலும் குறிப்பாக கடைசியாக நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் கடந்த ஆண்டு முழுவதும் சிக்சரே அடிக்காத மேக்ஸ்வெல் இம்முறை சிக்சர் பவுண்டரி என அடித்து நொறுக்குகிறார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டம் பெங்களூரு அணிக்கு அணியின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மேக்ஸ்வெல்லின் இந்த அதிரடியான ஆட்டத்திற்கு காரணம் என்ன என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த பல தொடர்களாகவே மேக்ஸ்வெல் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியுள்ளார் என்றாலும் பெங்களூர் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

maxwell

அதற்கு காரணம் யாதெனில் மெக்ஸ்வெல்லுக்கு பெங்களூர் அணி தான் சிறப்பான ஏதுவான அணி. ஏனெனில் பெங்களூரு அணியில் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் உள்ளதால் அவர்கள் மீது அதிக கவனம், எதிர்பார்ப்பும் உள்ளது. இதனால் மேக்ஸ்வெல் மீது உள்ள அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவை குறைகிறது. அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் அணியில் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய பெரிய தூண்கள் இருப்பதால் அவர் தனது ஆட்டத்தை மிகவும் இயல்பாகவும், சுதந்திரமாகவும் விளையாடுகிறார்.

Maxwell

இதன்காரணமாக எந்த ஒரு அணியையும் அவரால் எளிதாக அடித்து நொறுக்க முடிகிறது. இதன் காரணமாகவே அவர் பெங்களூர் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நிச்சயம் இந்த ஆண்டு பெங்களூர் அணிக்காக இவர் பெரிய ரன்களை குவிப்பார் என்று வாகன் கூறியது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக ஐபிஎல் தொடரில் பஞ்சாப், மும்பை, டெல்லி என பல அணிகளில் மேக்ஸ்வெல் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement