- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விமர்சித்த நானே சொல்றேன்.. சுப்மன் கில் 45 தாண்டாம இங்கிலாந்து தொடரை முடிக்க மாட்டாரு.. மைக்கேல் வாகன்

இங்கிலாந்தின் பர்மிங்கம் மைதானத்தில் ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையின் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் ஜூலை 2ஆம் தேதி துவங்கிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 587 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதத்தை அடித்து 269 ரன்கள் குவித்தார். அவருடன் வாசிங்டன் சுந்தர் 42, ஜெய்ஸ்வால் 87, ரவீந்திர ஜடேஜா 89 ரன்கள் குவித்து இந்தியாவை தூக்கி நிறுத்தினர். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

விமர்சித்த மைக்கேல் வாகன்:

முன்னதாக 2020ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சுப்மன் கில் 2021 காபா போட்டியில் 91 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியாவில் சரித்திர வெற்றி பெற உதவினார். அதைத் தவிர்த்து வெளிநாடுகளில் சுமாராக விளையாடிய அவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்றவர் என்ற சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியில் சதத்தை அடித்த கில் 2வது போட்டியில் இரட்டை சதத்தை அடித்து விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சுப்மன் கில் 35 என்ற சுமாரான பேட்டிங் சராசரியைக் கொண்டிருப்பது பற்றிய தாமே விமர்சித்ததாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ஆனால் கேப்டனாக அசத்தத் துவங்கியுள்ள அவருடைய பேட்டிங் சராசரி இங்கிலாந்து தொடர் முடியும் போது 45 தொட்டிருக்கும் என்று மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

45 தொடாம முடிக்க மாட்டாரு:

“தொடரின் துவக்கத்தில் சுப்மன் கில் சராசரி வெறும் 35 என்றும், அது அவரைப் போன்ற வீரரின் தரத்திற்கு போதுமானதல்ல என்றும் கூறியிருந்தேன். ஆனால் இத்தொடரின் முடிவில் அவருடைய சராசரி 45 ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். கேப்டனாக சிறப்பாகத் துவங்கியுள்ள அவர் 2 போட்டிகளில் 2 சதங்கள் அடித்துள்ளது அற்புதமானது”

இதையும் படிங்க: இங்கிலாந்தில் ஆல் டைம் மாஸ்டர்க்ளாஸ்.. முன்னேறிய கில்லுக்கு இனிமேல் அது செட்டாகாது.. கங்குலி பாராட்டு

“2வது போட்டியில் சுப்மன் கில் டாஸ் தோற்றது சிறந்தது. கவாஸ்கர் சொன்னது போல சிறந்த கிரிக்கெட் வீரர்கள் ஸ்விங், வேகம் அதிகமாக இல்லாத நல்ல ஆடுகளத்தில் அசத்துவார்கள். அவருடைய கால்கள் நன்றாக நகர்கிறது. அவருடைய டெக்னிக் தூய்மையானதாக இருக்கிறது. இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற மனநிலையை அவர் கொண்டுள்ளார்” என்று பாராட்டினார். சொல்லப்போனால் முதல் போட்டிக்கு முன் 35 ஆக இருந்த கில் பேட்டிங் சராசரி இப்போதே 40 தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

- Advertisement -