இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்ற போகும் அணி இதுதான் – மைக்கல் வாகன் கருத்து

Vaughan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று நடந்து முடிந்தது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி மறுபடியும் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4வது போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளும் இரண்டு போட்டிகளில் வென்ற வேளையில் தொடரின் இறுதி ஆட்டத்தில் வெல்லப்போகும் அணி கோப்பையை கைப்பற்றும் என்கிற நிலை உருவானது.

Trophy

- Advertisement -

இந்நிலையில் நேற்று இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது மட்டுமல்லாமல் கோப்பையும் வென்றது. இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டிய இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் இதே அகமதாபாத் மைதானத்தில் இந்த ஆண்டு இறுதியில் உலக கோப்பை டி20 தொடர் நடைபெறும் அதிலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத அதிக வாய்ப்புள்ளது.அந்த போட்டியில் இங்கிலாந்து அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

டி20 தொடர் ஆரம்பத்திலிருந்தே இந்திய அணியை பல்வேறு வகையில் விமர்சித்து வந்த வாகன் இப்பொழுது உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்றும் அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆகும் என்றும் கூறியுள்ளார். இதையும் ரசிகர்கள் அவரது பதிவின் கீழ் கிண்டலடித்து வருகின்றனர்.

archer 1

இந்திய அணி முதன்முதலாக நடத்தப்பட்ட 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை வென்றது முதலும் கடைசியுமாக உள்ளது. அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு டி20 கோப்பையை வெல்லும் வாய்ப்பை இறுதி ஆட்டத்தில் ஸ்ரீலங்காவிடம் பறிகொடுத்தது. அதேபோல 2016ம் ஆண்டு அரையிறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் பறி கொடுத்தது. மறுமுனையில் இங்கிலாந்து அணி 2010 இல் தனது முதல் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன் பின்னர் கடைசியாக நடைபெற்ற 2014 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் பறிகொடுத்தது.

IND-vs-ENG

எனவே இந்த இரு அணிகளும் தங்களது 2வது டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்ற இந்த ஆண்டு இறுதியில் கடும் போட்டி போடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.மேலும் இந்திய கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து அணி இந்த ஆண்டு நடக்க உள்ள டி20 உலக கோப்பை தொடரை வெல்லக்கூடிய அணியாக தெரிகிறது என்று கூறியுள்ளார். அதேபோல மறுமுனையில் ஜோஸ் பட்டிலர் இந்திய அணி இந்த ஆண்டு நடக்க உள்ள டி20 உலக கோப்பை தொடரை வெல்லக்கூடிய அணியாக தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.

Advertisement