முதலில் வாயை கழுவுங்க.. பெங்களூரு பற்றி மைக்கேல் வாகன் வெளியிட்ட கணிப்பு.. ஆர்சிபி ரசிகர்கள் அதிருப்தி

Micheal Vaughan 33
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற மகளிர் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றது. குறிப்பாக ஸ்மிரிதி மந்தனா தலைமையில் லீக் சுற்றில் கடினமாக போராடிய பெங்களூரு கடைசி அணியாக பிளே ஆப் சுற்றுக்கு வந்தது. அங்கே நடப்புச் சாம்பியன் மும்பையை எலிமினேட்டரில் தோற்கடித்த பெங்களூரு ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

அதைத்தொடர்ந்து மார்ச் 17ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் டெல்லியை அதன் சொந்த மண்ணில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதன் வாயிலாக மகளிர் ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக பெங்களூரு வென்றுள்ளது. அதன் காரணமாக ஆர்சிபி அணி ரசிகர்கள் தற்போது வெற்றி கொண்டாட்டத்தில் திளைத்து வருகின்றனர்.

- Advertisement -

மைக்கேல் வாகன் கணிப்பு:
ஏனெனில் ஆடவர் ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை 16 வருடங்களாகியும் கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது. குறிப்பாக எத்தனையோ மகத்தான வீரர்கள் விளையாடியும் முக்கிய நேரத்தில் சொதப்புவதை வழக்கமாக வைத்திருக்கும் அந்த அணி 2009, 2011, 2016 ஆகிய வருடங்களில் ஃபைனல் வரை சென்று கோப்பையைக் கோட்டை விட்டது.

அந்த சூழ்நிலையில் கடந்த வருடம் தோல்வியை சந்தித்த மகளிர் ஆர்சிபி அணி இம்முறை சிறப்பாக விளையாடி தங்களுடைய 2வது முயற்சியிலேயே கோப்பையை வென்றுள்ளது. அதனால் காலம் காலமாக சந்தித்து வந்த கிண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் பேசும் ஆர்சிபி ரசிகர்கள் விரைவில் துவங்கும் ஆடவர் ஐபிஎல் தொடரிலும் ஃபப் டு பிளேஸிஸ் தலைமையிலான தங்களுடைய அணி கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் மகளிரணியை போலவே இந்த வருடம் ஆடவர் ஆர்சிபி அணியும் கோப்பையை வெல்லும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கணித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “அருமையான தொடர். ஆர்சிபி அணிக்கு தகுதியான வெற்றி கிடைத்துள்ளது. இதே போல ஆண்கள் அணியும் இரட்டைக் கோப்பையை வெல்லுமா. இது அந்த வருடமாக இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதம்.. கதவை மூடி அழுத அஷ்வின் – அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல்

அதை பார்க்கும் ஆர்சிபி ரசிகர்கள் முதலில் வாயை கழுவுங்கள் என்று அவருடைய கணிப்பு மீது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். ஏனெனில் கடந்த காலங்களில் தோற்கும் என்று அவர் சொன்ன பெரும்பாலான போட்டிகளில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. அதே போல கண்டிப்பாக வெல்வோம் என்று அவர் சொன்ன பெரும்பாலான போட்டிகளில் இங்கிலாந்து தோற்றுள்ளது. அந்த வகையில் அவருடைய கணிப்பு இம்முறை பொய்யாகலாம் என்பதாலேயே ஆர்சிபி ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Advertisement