இந்தியாவுடன் செமி ஃபைனலில் அந்த டீம் மோதுவதற்கு வாய்ப்பு பிரகாசமாகிடுச்சு.. மைக்கேல் வாகன் கருத்து

Micheal Vaughan 5
- Advertisement -

அனல் பறக்க நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 45 போட்டிகள் கொண்ட லீக் சுற்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதில் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா முதல் 8 லீக் போட்டியிலும் தொடர்ச்சியாக வென்று புள்ளி பட்டியலில் முதலிடம் படித்து செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ள நிலையில் தென்னாப்பிரிக்க 2வது அணியாக தகுதி பெற்றது.

அந்த நிலையில் மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 3வது அணியாக செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அப்போட்டியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 292 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து 91/7 என சரிந்ததால் நிச்சயம் தோல்வியை சந்திக்கும் என்று அனைவரும் நினைத்தனர்.

- Advertisement -

மைக்கேல் வாகன் கணிப்பு:
ஆனால் மிடில் ஆர்டரில் கேப்டன் கமின்ஸ் உதவியுடன் நங்கூரமாக நின்று காயத்தையும் தாண்டி அடித்து நொறுக்கிய கிளன் மேக்ஸ்வெல் இரட்டை சதமடித்து 201* (128) ரன்கள் விளாசி காலத்திற்கும் மறக்க முடியாத வெற்றியை ஆஸ்திரேலியாவுக்கு பரிசளித்தார். இதன் காரணமாக தங்களுடைய கடைசி போட்டியில் தோற்றாலும் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்க அணிகள் புள்ளி பட்டியலில் 2, 3வது பிடிக்கும் என்பதால் அரையிறுதி சுற்றின் 2வது போட்டியில் மோதுவது உறுதியாகியுள்ளது.

அதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவுடன் அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் மோதப்போவது யார் என்பதே தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய 4 அணிகள் போட்டியிடுகின்றன. அதில் நெதர்லாந்துக்கு மிகவும் குறைவான வாய்ப்பிருக்கும் நிலையில் மற்ற அணிகளை காட்டிலும் மிகவும் அதிக ரன்ரேட் கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கு தான் இந்தியாவுடன் மோதுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

குறிப்பாக தங்களுடைய கடைசி போட்டியில் இலங்கையை சாதாரணமாக தோற்கடித்தாலே நியூசிலாந்து செமி ஃபைனலுக்கு தகுதி பெறும். இந்நிலையில் “ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா பதிவு செய்து இந்த வெற்றி பலரும் கனவு காணும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் செமி ஃபைனல் போட்டிக்கான வாய்ப்பை சாத்தியப்படுத்தியுள்ளது” என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அவமானமா இல்லையா.. இது லோக்கல் கிடையாது.. அவரோட பேச்சை கேளுங்க.. ஹசன் ராஜாவுக்கு ஷமி பதிலடி

அதாவது கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் நவம்பர் 15ஆம் தேதி செமி ஃபைனலில் மோதுவதற்கு வாய்ப்புள்ளதாக மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு இங்கிலாந்துக்கு எதிராக நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் தங்களுடைய கடைசி போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும். அத்துடன் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை முறையே இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தோற்கடிக்க வேண்டும். எனவே இந்தியா – பாகிஸ்தான் மோதுவதற்கு தற்சமயத்தில் வாய்ப்பு மிகவும் உறுதியற்றதாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement