ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடர் நவம்பர் 21ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்கியது. அத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அதனால் 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதையும் காண்பித்துள்ளது.
உண்மையை சொல்லப்போனால் அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 172 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் தனி ஒருவனாக 7 விக்கெட்டுகள் அடுத்து இங்கிலாந்தை தெறிக்க விட்டார். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவை 132 ரன்களுக்கு சுருட்டி வீசிய இங்கிலாந்து நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காண்பித்தது.
வாய் மூடுவதற்குள்:
அத்துடன் பெர்த் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்த நிலைமையில் 40 ரன்களை முன்னிலையாகப் பெற்ற இங்கிலாந்து வெற்றி வாய்ப்பைப் பிரகாசப்படுத்தியது. அப்போது முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் முதல் நாள் முடிவில் ட்விட்டரில் பதிவிட்டது பின்வருமாறு. “இது ஒட்டுமொத்த வரலாற்றில் மிகவும் நாடகமான முதல் நாள் என்று இருக்கிறீர்களா? நான் அப்படித்தான் நினைக்கிறேன்”
“2வது நாள் எதை கொண்டு வரும்? எனக்குத் தெரிந்து இங்கிலாந்து 2வது நாள் முழுவதும் பேட்டிங் செய்து கடைசியில் வெற்றிக்கான மொத்தக் கட்டுப்பாட்டையும் தங்களிடம் வைத்துக் கொள்ளும் என்று கணிக்கிறேன்” என ஆனந்தத்துடன் பதிவிட்டார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் 164 ரன்கள் மட்டுமே எடுத்து 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
புஸ்வானமான கணிப்பு:
இருப்பினும் முதல் இன்னிங்ஸில் 172 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஸ்திரேலியா 4வது இன்னிங்ஸில் கடினமான பிட்ச்சில் 205 ரன்களை சேசிங் செய்யாது என்று பலரும் நினைத்தனர். அதற்கு விதிவிலக்கு ஆகாத மைக்கேல் வாகன் ட்விட்டரில். “கடந்த இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இப்போட்டியை வெல்லும். அதனால் இங்கிலாந்து இப்போட்டியை வெல்லும் என்பதை உங்களுக்கு வரலாறு சொல்லும்” என்று 2வது நாளில் பதிவிட்டார்.
இதையும் படிங்க: 7.23 ரன்ரேட்.. நேரலையில் கலங்கிய ப்ராட்.. உண்மையான பஸ்பாலை காட்டிய ஆஸி உலக சாதனை வெற்றி
ஆனால் அப்படி மைக்கேல் வாகன் சொல்லி வாய் மூடுவதற்குள் அடுத்த 2 மணி நேரத்திற்குள் 28.2 ஓவரில் 205 ரன்களை அடித்த ஆஸ்திரேலியா எளிதாக வெற்றி பெற்றது. குறிப்பாக இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய ட்ராவிஸ் ஹெட் 123 (83) ரன்கள் விளாசி வெற்றியைப் பறித்தார். அதனால் தம்முடைய கணிப்பு புஸ்வானமாக மாறியதால் மைக்கேல் வாகன் ட்விட்டரில் தற்போது. “வேண்டுமானால் இப்போது இங்கிலாந்து வெல்லாமல் போயிருக்கலாம்” என்று சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.



