ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. நவம்பர் 21ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 172 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 52, ஓலி போப் 46, ஜேமி ஸ்மித் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு மிட்சேல் ஸ்டார்க் அதிகபட்சமாக 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவை 132 ரன்களுக்கு சுருட்டி வீசிய இங்கிலாந்து நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 26, கேமரூன் க்ரீன் 24, டிராவிஸ் ஹெட் 21 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
உலக சாதனை சேசிங்:
அடுத்ததாக 40 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இங்கிலாந்தை நன்றாக பந்து வீசிய ஆஸ்திரேலியா 164 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அதிகபட்சமாக ஓலி போப் 33, பென் டக்கெட் 28, கஸ் அட்கின்ஷன் 37, ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இறுதியில் 205 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்த பெர்த் பிட்ச்சில் மீண்டும் திணறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 69 பந்தில் சதத்தை அடித்து 123 (83) ரன்கள் குவித்து இங்கிலாந்தை தோற்கடித்தார். அவருடன் லபுஸ் லஸ்ன் 51* (49), வெதர்லேண்ட் 23 ரன்கள் எடுத்தனர்.
கலங்கிய ப்ராட்:
அதனால் 28.2 ஓவரிலேயே 205/2 ரன்களை 7.23 என்ற ரன்ரேட்டில் குவித்த ஆஸ்திரேலியா எளிதாக வென்றது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 200க்கும் மேற்பட்ட இலக்கை அதிக ரன்ரேட்டில் வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற உலக சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. இதற்கு முன் 2022 நாட்டிங்காம் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து 299 ரன்களை 5.98 ரன்ரேட்டில் சேசிங் செய்ததே முந்தைய சாதனை.
அந்த வகையில் பஸ்பாஸ் என்ற பெயரில் அதிரடியாக விளையாடுகிறோம் என்று சொல்லக்கூடிய இங்கிலாந்துக்கு இப்போட்டியில் ஆஸ்திரேலியா உண்மையான அதிரடியை காட்டியது என்றே சொல்லலாம். இதற்கிடையே சச்சினுக்குப் பின் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ள இங்கிலாந்து ஜாம்பவான் ஜோ ரூட் ஆஸ்திரேலியாவில் சதத்தை அடித்ததில்லை.
இதையும் படிங்க: வேறு எந்த வீரரும் செய்யாத தனித்துவமான சாதனையை நிகழ்த்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ
அதனால் சந்தித்து வரும் கிண்டல்களை ரூட் இத்தொடரில் உடைப்பார் என்று இங்கிலாந்து ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த சூழ்நிலையில் முதல் இன்னிங்ஸில் ஸ்டார்க்கிடம் டக் அவுட்டான அவர் 2வது இன்னிங்ஸில் 8 ரன்னில் அவுட்டானார். அதை நேரலையில் வர்ணனையாளராக பார்த்த முன்னாள் இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் ப்ராட் சில நிமிடங்கள் கண்கலங்கி சோகமடைந்தார்.



