இந்திய அணியில் இவங்க 2 பேர் ஓப்பனிங் ஆடுறது சச்சின் சேவாக் விளையாடறது மாதிரி இருக்கு – மைக்கல் வான் புகழாரம்

Vaughan
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஏகப்பட்ட துவக்க ஜோடிகளை களமிறக்கி பார்த்துவிட்டது. முதல் டி20 போட்டியில் ஷிகர் தவான் மற்றும் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதில்தான் தவான் ரன் குவிக்க திணறியதால் அவரை நீக்கிவிட்டு இரண்டாவது போட்டியில் ராகுலுடன் இஷான் கிஷன் களமிறக்கப்பட்டார். இந்த போட்டியில் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினாலும் மூன்றாவது போட்டியில் ரோகித் அணிக்குள் வந்ததும் ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் 3-வது போட்டியில் துவக்க வீரராக களமிறங்கினர்.

rahul

- Advertisement -

மேலும் அதே ஜோடியே 4-வது போட்டியிலும் களமிறங்கியது. இருப்பினும் ஒருபுறம் ஒருவர் சிறப்பாக ஆடினாலும் அந்த நான்கு போட்டிகளிலும் ராகுல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இப்படி இந்த தொடர் முழுவதுமே ராகுல் – தவான், இஷான் கிஷன் – ராகுல், ரோஹித் -ராகுல் என துவக்க ஜோடி மாறிக்கொண்டே இருந்தது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது கடைசி t20 போட்டியில் ராகுலை நீக்கிவிட்டு ரோகித் உடன் கேப்டன் கோலி தொடக்க வீரராக களம் இறங்கினார்.

எதிர்பார்த்தபடியே இந்த ஜோடி அந்த 5வது போட்டியில் சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபட்டது. அதிரடியாக விளையாடி இருவரும் முதல் 9 ஓவர்களில் 94 ரன்கள் குவித்தனர். அதன் காரணமாக இந்திய அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 224 ரன்களை குவித்தது. ரோகித் 64 ரன்களும், கோலி 80 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் காரணமாக இந்த ஜோடிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Rohith-1

மேலும் இந்த ஆட்டம் முடிந்து தான் இந்திய அணிக்கு தொடக்க வீரராக உலக கோப்பையில் விளையாட ஆசைப்படுகிறேன் என்று வெளிப்படையாக கோலி கூறிவிட்டார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் தான் துவக்க வீரராக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் இந்த புதிய தூக்க ஜோடியை பாராட்டி இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை இட்டுள்ளார்.

அதில் அவர் பதிவிட்டதாவது : இந்த ஜோடியை போன்ற ஒரு சிறப்பான ஜோடியை இந்திய அணியில் பார்க்க முடியாது. ரோஹித் மற்றும் கோலி இணைந்து விளையாடுவது சேவாக் மற்றும் சச்சின் விளையாடுவதை போன்று உள்ளது. இவர்கள் இருவரையும் சச்சின் சேவாக் உடன் ஈசியாக இணைத்து ஓப்பிடலாம். இந்திய அணி இதே துவக்க ஜோடியுடன் விளையாட வேண்டும் என்றும் மைக்கேல் வாகன் பாராட்டி தனது பதிவை இட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement