ஒத்துக்கிறேன் ஜெய் ஷா விடமாட்டாரு.. ரூட் – விராட் கோலி ஆகியோரில் சிறந்த பேட்ஸ்மேன் பற்றி மைக்கேல் வாகன் 

Micheal Vaughan
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 12377 ரன்களையும் 34 சதங்களையும் அடித்துள்ளார். மேலும் இங்கிலாந்துக்காக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் சமீபத்தில் படைத்தார். அத்துடன் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகியோர் அடங்கிய ஃபேப் 4 பேட்ஸ்மேன்களில் ஜோ ரூட் முன்னணியில் இருக்கிறார்.

அதனால் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் உடைப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் காணப்படுகிறது. இந்நிலையில் ஜோ ரூட் மற்றும் விராட் கோலி ஆகியோரில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற விவாதம் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் யூடியூப் சேனலில் நடைபெற்றது. அதில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகனும் பங்கேற்றார்.

- Advertisement -

ஜெய் ஷா விடமாட்டாரு:

அதில் விராட் கோலியை விட ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் என்று அவர் கூறினார். ஆனால் ஆஸ்திரேலிய மண்ணிலும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ரூட்டை விட விராட் கோலி தான் சிறந்தவர் என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதை விட சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை ஜோ ரூட் உடைக்க புதிய ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜெய் ஷா விட மாட்டார் என்றும் அவர் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.

ஏனெனில் உலக சாதனை பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் டாப் இடத்தில் இருப்பதையே ஜெய் ஷா விரும்புவார் என்று மைக்கேல் வாகன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் உடைத்தால் அது டெஸ்ட் கிரிக்கெட்டில் நடந்த சிறந்த விஷயமாக இருக்கும். இருப்பினும் ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ அந்த உலக சாதனை பட்டியலில் ஒரு ஆங்கிலேயர் இருப்பதை விரும்ப மாட்டார்கள்”

- Advertisement -

சச்சினை முந்துவாரா:

“அவர்கள் ஒரு இந்தியர் இருப்பதையே விரும்புவார்கள். ஒருவேளை ஜோ ரூட் தவற விட்டால் அந்த சாதனையை மற்றவர் எடுப்பது கடினமாக இருக்கும். புள்ளிவிவரங்கள் அடிப்படையில் ஜோ ரூட் சிறந்த வீரர். இருப்பினும் விராட் கோலிக்கு நிகராக அவர் அனைவரது கவனத்தை பெறுவதில்லை. அதே சமயம் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஜோ ரூட்டை விட விராட் கோலி முன்னிலையில் இருக்கிறார்”

இதையும் படிங்க: 9.4 ஓவரில் 156 ரன்ஸ்.. டிராவிஸ் ஹெட் மிரட்டல்.. ஸ்காட்லாந்தை புரட்டிய ஆஸ்திரேலியா.. உலக சாதனை வெற்றி

“ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி சிறந்த வீரராக திகழ்கிறார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் சாதனைகள் சிறப்பாக உள்ளது” என்று கூறினார். இந்த நிலையில் 15921 ரன்களுடன் முதலிடத்தில் உள்ள சச்சினை முந்துவதற்கு 4000க்கும் குறைவான ரன்களே தேவைப்படுகிறது. எனவே 33 வயதாகும் ஜோ ரூட் ஜாம்பவான் சச்சின் சாதனையை உடைப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

Advertisement