- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எங்க ஆளையே ரசிக்க வைத்த சைன்ஸ் பைத்தியம் ரிஷப் பண்ட்.. கில்கிறிஸ்ட், தோனி மாதிரி.. மைக்கேல் வாகன்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரில் விளையாடுகிறது. 5 போட்டிகளைக் கொண்ட அந்தத் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் வரலாற்றில் ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்து தோல்வியை சந்தித்த முதல் அணி என்ற மோசமான உலக சாதனையை இந்தியா படைத்தது.

அதன் காரணமாக ஒரு டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சிலும் சதத்தை அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட் போராட்டமும் வீணானது. கடந்த ஆஸ்திரேலிய தொடரில் சுமாராக விளையாடிய அவரை ஸ்டுப்பிட் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்தார். அந்த நிலையில் இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் அடித்த அவர் 2வது இன்னிங்ஸில் 118 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

பைத்தியக்காரத்தனத்தில் அறிவியல்:

இந்நிலையில் ரிசப் பண்ட் பேட்டிங் பார்ப்பதற்கு பைத்தியக்காரத்தனமாக தெரியும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பின்னணியில் நிறைய அறிவியல் இருப்பதாக பாராட்டும் அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தோனி எப்படி விளையாடுகிறாரோ அதே போல டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் அசத்துவதாக பாராட்டியுள்ளார்.

அவருடைய ஆட்டத்தைப் பார்த்து தங்களுடைய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரசிப்பதாகவும் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் போல புதிய ட்ரெண்ட்டை உருவாக்கும் ரிசப் பண்ட் பற்றி வாகன் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் விளையாடும் பைத்தியக்காரத்தனமான ஆட்டத்தில் நிறைய அறிவியல் இருக்கிறது”

- Advertisement -

தோனி, கில்கிறிஸ்ட் போல:

“அவர் விளையாடும் போது பென் ஸ்டோக்ஸ் ரசிப்பதை உங்களால் பார்க்க முடியும். என்னைப் பொறுத்த வரை ஆடம் கில்க்ரிஸ்ட் இந்த விளையாட்டு கண்ட சிறந்த விக்கெட் கீப்பர். ஆனால் ரிசப் பண்ட் முற்றிலும் புதிய டிரெண்டை உருவாக்கி வருகிறார். தோனி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அற்புதமானவர். ரிஷப் பண்ட் விளையாடும் ஆட்டம் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு பொருந்தும் என்று நீங்கள் நினைப்பீர்கள்”

இதையும் படிங்க: 410 ஓவர்ஸ்.. உலகிலேயே பும்ரா பாவங்க.. இந்தியாவுக்காக தனியாளாக போராடி உறிஞ்சப்படும் ஹீரோவாக பரிதாபம்

“ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய ரெக்கார்ட் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை விட அற்புதமாக இருக்கிறது” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் மற்றொரு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் சிரிக்கிறார் என்பதற்காக வெற்றி பெற விரும்பவில்லை அல்லது போட்டியற்ற வீரர் என்று அர்த்தமல்ல. விளையாட்டுக்காக நீங்கள் ஒரு போட்டியில் 2 சதங்கள் அடிக்க மாட்டீர்கள்” என்று பாராட்டினார்.

- Advertisement -