ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ரிஷப் பண்ட் தலைமையில் களமிறங்கியுள்ளது. 27 கோடி என்ற வரலாறு காணாத உச்சகட்ட தொகைக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் எப்படி அசத்தப்போகிறார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வருடத்தின் முதல் போட்டியிலேயே டெல்லிக்கு எதிராக அவரது தலைமையில் லக்னோ 1 விக்கெட் வித்தியாசத்தில் கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்டது.
மார்ச் 24ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 210 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. சொல்லப்போனால் நிகோலஸ் பூரான் 75, மிட்சேல் மார்ஷ் 72 ரன்கள் எடுத்ததால் லக்னோ 230 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரிஷப் பண்ட் 6 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டாகி வேகத்தை குறைத்தார்.
பண்ட் சொதப்பல்:
இது ஒரு புறமிருக்க ஆரம்பத்திலேயே 2 ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்த சர்துள் தாகூரை 18, 19, 20 போன்ற டெத் ஓவர்களில் அவர் பயன்படுத்தவில்லை. மாறாக பிரின்ஸ் யாதவ் போன்ற அனுபவமற்ற வீரரிடம் 19வது ஓவரை கொடுத்த அவர் 20வது ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது சபாஷ் அகமதிடம் பந்தை வழங்கினார். அதில் முதல் பந்தையே மோகித் சர்மா தவற விட்டார்.
அப்போது ரிஷப் பண்ட் பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்ய தவறியது லக்னோவின் தோல்வியை உறுதி செய்தது. ஏனெனில் அதைப் பயன்படுத்திய மோஹித் அடுத்த பந்தில் சிங்கிள் எடுக்க அதற்கடுத்த பந்தில் அசுடோஸ் அசால்டாக சிக்சர் அடித்து போட்டியை முடித்தார். ஒருவேளை ஸ்டம்ப்பிங்கை சரியாக அவர் செய்திருந்தால் டெல்லி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும்.
தோனி மாதிரி இல்ல:
இந்நிலையில் ஒருவேளை அந்த இடத்தில் தோனி இருந்தால் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்திருப்பார் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். இதற்கு முந்தைய போட்டியில் சூரியகுமாரை 43 வயதில் வெறும் 0.12 நொடியில் தோனி ஸ்டம்பிங் செய்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதை நினைவில் வைத்து மைக்கேல் வாகன் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: 11 பந்தில் 46 ரன்ஸ்.. வெட்டிய விரல் காயத்தையும் தாண்டி மிரட்டிட்டாரு.. அசுடோஸ்க்கு கோச் பதானி பாராட்டு
“கடைசி ஓவர் கிட்டத்தட்ட லக்னோவுக்கு வெற்றியைக் கொண்டு வந்தது. அங்கே ரிஷப் புத்திசாலித்தனமாக செயல்பட்டு ஸ்டம்ப்பிங் செய்திருந்தால் அனைத்தும் மாறியிருக்கும். ஒருவேளை அங்கே எம்எஸ் தோனி இருந்திருந்தால் அந்த பெய்ல்ஸ் மின்னலைப் போல நீக்கப்பட்டிருக்கும். சபாஷ் அகமதை வைத்து கடைசி ஓவரில் ரிஷப் பண்ட் உருவாக்கிய பந்தயம் போன்ற வாய்ப்பை அவரே தவற விட்டார்” என்று கூறினார்.



