ஹரி ப்ரூக்கை இந்திய வாரியம் தடை செஞ்சது கரெக்ட் தான்.. விலகிய பின்னணியை பகிர்ந்த மைக்கேல் வாகன்

Micheal Vaughan
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. அந்தத் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடுவதற்காக இளம் இங்கிலாந்து வீரர் ஹரி ப்ரூக் 6.25 கோடிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டிருந்தார். சமீப காலங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

அதன் காரணமாக தங்களுடைய அணிக்கும் அசத்துவார் என்ற நம்பிக்கையுடன் அவரை டெல்லி நிர்வாகம் வாங்கியது. ஆனால் கடைசி நேரத்தில் 2025 ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக ஹரி ப்ரூக் சமீபத்தில் அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அசத்துவதற்காக தேவையான பயிற்சிகளை எடுப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்தார்.

- Advertisement -

2 வருடம் தடை:

அந்த முடிவுக்காக டெல்லி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் ஹரி ப்ரூக் தெரிவித்துள்ளார். சமீப காலங்களில் வணிந்து ஹஸரங்கா, ஜேசன் ராய் போன்ற வெளிநாட்டு வீரர்கள் இப்படி ஐபிஎல் ஏலத்தில் தேர்வாவான போதிலும் கடைசி நேரத்தில் வெளியேறினார்கள். அப்படி கடைசி நேரத்தில் வெளியேறும் வீரர்களால் அவர்களை வாங்கும் அணிகளின் வெற்றிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கடைசி நேரத்தில் காயத்தை தவிர்த்து வேறு காரணத்துக்காக வெளியேறும் வீரர்களுக்கு 2 வருடம் தடை விதிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் தற்போது கடைசி நேரத்தில் வெளியேறியுள்ள ஹரி ப்ரூக் 2026, 2027 ஆகிய 2 ஐபிஎல் தொடர்களில் விளையாடுவதற்கு தடை பெற்றுள்ளார். இந்நிலையில் ஹரி ப்ரூக்கிற்கு ஐபிஎல் தொடரில் விளையாட பிசிசிஐ 2 வருடம் தடை விதித்துள்ளது சரியானது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் கேப்டன் கூறியுள்ளார். இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சரியான முடிவு:

“பிசிசிஐ சரியான முடிவு எடுத்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். விதிமுறைகள் விதிமுறைகளே. இந்த விதிமுறையை அவர்கள் கடந்த வருட ஐபிஎல் தொடரின் முடிவிலேயே அறிவித்தார்கள். ஏலத்தில் பங்கேற்கும் நீங்கள் விளையாடுவதற்கு ஆம் என்று சொல்லி விட்டு கடைசியில் வெளியேறக்கூடாது. ஹரி ப்ரூக் எந்த காயத்தையும் சந்திக்கவில்லை”

இதையும் படிங்க: விராட் கோலியை எதிர்கொள்ள தயாரா இருக்கேன்.. அந்த 2 ரூல்ஸ் பெரிசா எதையும் மாத்தாது.. வருண் பேட்டி

“அவர் ஐபிஎல் தொடரில் சென்று விளையாட விரும்பவில்லை. அதனால் இங்கிலாந்திலேயே இருந்து கொண்டார். அனேகமாக இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டனாக அவர் நியமிக்கப்படலாம். அதனாலேயே அந்த வேலையில் கவனம் செலுத்துவதற்காக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். அது இங்கிலாந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஆனால் ஐபிஎல் தொடரில் விலகியது அவரை வாங்கிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

Advertisement