விராட் கோலியை எதிர்கொள்ள தயாரா இருக்கேன்.. அந்த 2 ரூல்ஸ் பெரிசா எதையும் மாத்தாது.. வருண் பேட்டி

Varun Chakravarthy
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணி தங்களது சொந்த ஊரில் பெங்களூருவை சந்திக்கிறது. ஐபிஎல் தொடரில் பந்தின் மீது சலிவாவை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இந்த வருடம் நீக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர போட்டிகளில் பனி சேசிங் செய்யும் அணிகளுக்கு சாதகத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது.

எனவே அதை உடைத்து பேட்டிங், பௌலிங் ஆகிய 2க்கும் சமமான போட்டியை ஏற்படுத்தும் வகையில் இரவு நேர போட்டிகளில் 2வது இன்னிங்ஸில் 2 பந்துகள் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விதிமுறைகள் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக ஷமி, சிராஜ் ஆகிய இந்திய பவுலர்கள் அந்த விதிமுறைகளை வரவேற்றுள்ளார்கள்.

- Advertisement -

வருண் கருத்து:

இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை அந்த 2 விதிமுறைகளும் பெரிய தாக்கத்தை அல்லது உதவியை செய்யப்போவதில்லை என்று கொல்கத்தாவுக்கு விளையாடும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ள விதிமுறைகளை நானும் பார்த்தேன். இருப்பினும் சலிவாவை பயன்படுத்துவது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று எனக்குத் தோன்றவில்லை”

“வேண்டுமானால் பனியின் தாக்கத்தை குறைப்பதற்காக பந்தை மாற்றப்படுவது ஸ்பின்னர்களுக்கு உதவி செய்யலாம். 11 – 12வது ஓவரில் பந்தை மாற்றும் போது ஸ்பின்னர் பவுலிங் செய்ய வருவார்கள். ஆனாலும் பந்து அந்தளவுக்கு ஈரமாக இருக்காது” எனக் கூறினார். மேலும் முதல் போட்டியில் பெங்களூருவுக்காக விளையாடும் விராட் கோலியை எதிர்கொள்வது பற்றி வருண் பின்வருமாறு.

- Advertisement -

கோலியுடன் மோதல்:

“விராட் கோலிக்கு எதிராக ஸ்பெஷலாக எதுவும் தயாராகவில்லை. போட்டி சூழ்நிலைகள் தான் எனக்கு விக்கெட்டுகள் எடுக்க உதவுகிறது. போட்டியில் இருக்கும் சூழ்நிலைகள் முற்றிலும் எங்களுக்கு சாதகமாக இருக்கிறது. அங்கே சிறப்பாக பவுலிங் செய்வது என்னால் சிறந்த சாத்தியமான முடிவை கொண்டுவர முடிகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்தமுறை ஆர்.சி.பி அணி தான் 10 ஆவது இடத்தை பிடிக்கும்.. அதுக்கு காரணம் இதுதான் – கில்கிறிஸ்ட் கருத்து

சமீபத்திய டி20 தொடர்களில் சிறப்பாக பௌலிங் செய்த வருண் சக்கரவர்த்தி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அதனால் சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற அவர் 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார். எனவே சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவர் இந்த ஐபிஎல் தொடரில் அசத்துவதற்கு தயாராகி உள்ளார்.

Advertisement