
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்தித்தது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியாமல் இந்தியா வெளியேறியது. இருப்பினும் அந்த தொடரில் கடைசி போட்டியின் கடைசி நாள் வரை கோப்பையை தக்க வைப்பதற்காக இந்தியா முழுமூச்சுடன் போராடியது என்று சொல்லலாம்.
மேலும் கடைசி 2 தொடரில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 21ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் அடுத்தடுத்த தொடர்களில் வீழ்த்திய முதல் அணியாக இந்தியா ஏற்கனவே உலக சாதனை படைத்துள்ளது. அதன் காரணமாக 1935 ஆஷஸ் தொடரை முந்திய 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை உலகிலேயே அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட தொடராக சாதனை படைத்தது.
அதனால் ஆசஸ் தொடரை விட பார்டர் – கவாஸ்கர் சிறந்தது என்று சில முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் 1000 சொன்னாலும் ஆஷஸ் மட்டுமே சிறந்தது என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். அதே சமயம் ஆஸ்திரேலியாவுக்கு போட்டியை கொடுப்பதில் இங்கிலாந்தை விட இந்தியா சிறந்த அணி என்று அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி மைக்கேல் வாகன் பேசியது பின்வருமாறு. “எப்போதும் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மோதலே சிறப்பான போட்டியாகும். ஆனால் தற்சமயத்தில் ஆஸ்திரேலியா – இந்தியா தான் சிறந்த போட்டியாக இருக்கிறது. ஆஷஸ் 150 வருட பழமை வாய்ந்தது. ஆனால் இந்தியா – ஆஸ்திரேலியா மோதல் 20 வருடங்களாக மட்டுமே இருக்கிறது”
“இந்தியா – ஆஸ்திரேலியா பார்ப்பதற்கு மிகவும் சிறந்த தொடர் என்று நீங்கள் சொல்லலாம். உண்மையில் அதில் என்ன நடக்கும் என்பது தெரிவதில்லை. ஆனால் ஆஷஸ் இப்போதும் மிகப்பெரிய போட்டி என்று நினைக்கிறேன். இருப்பினும் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் கடந்த தொடரில் இங்கிலாந்து போதுமான போட்டியை கொடுப்பதில்லை. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு நாங்கள் நிறைய போட்டியை கொடுத்து நல்ல தொடரை உருவாக்குகிறோம்”
இதையும் படிங்க: 7க்கு 7.. இந்தியாவுக்கு பின் உலக சாதனை போராட்டம் செய்த பாகிஸ்தானை சாய்த்த தெ.ஆ.. ஆஸிக்கு சவால்
“ஆனால் இந்தியா – ஆஸ்திரேலியா தொடர்கள் சொந்த மண்ணிலும் வெளிநாட்டிலும் போட்டி மிகுந்ததாக இருக்கிறது. அதே சமயம் இந்த தொடரில் முதல் போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகளில் இந்திய அணியால் ஆஸ்திரேலியாவுக்கு குத்து விட முடியவில்லை. ஆஸ்திரேலியா நல்ல கிரிக்கெட்டை விளையாடி எப்போதும் உங்கள் கையை ஓங்கியே வைத்திருந்தார்கள்” என்று கூறினார்.