ஆஸி டெக்னிக் ஓட்டையை சரிசெஞ்சு.. ஆடுனா ரூட் 100% சச்சின் சாதனையை உடைக்கலாம்.. மைக்கேல் வாகன்

Micheal Vaughan
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் உடைக்க தயாராகி வருகிறார். 1989 – 2013 வரையிலான காலகட்டங்களில் இந்தியாவுக்காக 200 போட்டிகளில் விளையாடிய சச்சின் 15921 ரன்கள் குவித்துள்ளார். தற்போது 146 போட்டிகளிலேயே ஜோ ரூட் சுமார் 12500 ரன்கள் அடித்துள்ளார்.

அதனால் அலஸ்டர் குக்கை முந்தி இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்துள்ள அவர் தற்போது 33 வயது மட்டுமே நிரம்பியுள்ளார். எனவே இன்னும் 3 – 4 வருடங்கள் விளையாடி 3000 – 4000 ரன்கள் குவித்து அவர் சச்சினை முந்துவதற்கு பிரகாச வாய்ப்புள்ளது. அதை நிச்சயம் ஜோ ரூட் செய்வார் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ஏற்கனவே கூறியிருந்தார்.

- Advertisement -

ஜேம்ஸ் ஆண்டர்சன் போல:

இந்நிலையில் 12000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ள ஜோ ரூட் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை சதம் அடிக்கவில்லை என்று மைக்கேல் வாகன் கூறியுள்ளார். எனவே பேட்டிங் டெக்னிக்கில் இருக்கும் சிறிய ஓட்டையை அவர் சரிசெய்ய வேண்டுமென மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். அதை செய்து ஜேம்ஸ் ஆண்டர்சன் போல இதே ஃபார்மில் நீண்ட காலம் விளையாடினால் கண்டிப்பாக சச்சினை முந்தி ரூட் சாதனை படைப்பார் என்று அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜோ ரூட் இந்த விளையாட்டை விரும்புகிறார் என்பதற்காக அலஸ்டர் குக் போல இருக்க மாட்டார். அலஸ்டர் குக் 6 வருடத்திற்கு முன்பாக கிட்டத்தட்ட 33 வயதில் ஓய்வு பெற்றார். ஜோ ரூட் தற்போது அதே வயதில் இருக்கிறார். ஆனால் அவர் ஆண்டர்சன் போல விளையாடுவதை பார்ப்பேன்”

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சதம்:

“ஆஸ்திரேலியாவில் சதம் அடிக்காதது உட்பட இன்னும் அவர் சாதிக்க நிறைய விஷயங்கள் உள்ளது. ஆஸ்திரேலியாவில் பேட்டிங் செய்யும் போது அவருடைய டெக்னிக்கில் பெரிய ஓட்டை இல்லை. இருப்பினும் அவரால் 3 இலக்கத்தை உடைக்க முடியவில்லை. ஜோ ரூட் இப்போதே கிரிக்கெட்டின் ராயல்ட்டி என்பதில் சந்தேகம் இல்லை. இப்போதே எனது கண்களில் அவர் இங்கிலாந்தின் மகத்தான பேட்ஸ்மேனாக வந்துள்ளார்”

இதையும் படிங்க: அவசரப்பட்டு வீணடிச்சுடாதீங்க.. மயங் யாதவை விட சிறந்த அவரை ஆஸி தொடருக்கு தேர்ந்தெடுக்கலாம்.. ஆர்பி சிங்

“அவரை விட மற்ற இங்கிலாந்து வீரர்கள் வித்தியாசமான ஃபார்மில் விளையாடியதில்லை. எனவே இதே போல நீண்ட காலம் விளையாடினால் சச்சின் டெண்டுல்கரை முந்தி அவர் அதிக ரன்கள் அடித்தவராக சாதனை படைக்க முடியும். அதனால் எப்போதும் புன்னகையுடன் இருக்கும் சிறந்த கிரிக்கெட் வீரரான அவர் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக இருப்பார்” என்று கூறினார்.

Advertisement