சச்சின் வாழ்நாள் சாதனையை ரூட் உடைப்பாரா? ஆடம் கில்கிறிஸ்ட், மைக்கேல் வாகன் கருத்து

Adam Gilchrist 2
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 145 போட்டிகளில் 12377 ரன்களை குவித்துள்ள அவர் 34 சதங்களையும் அடைத்துள்ளார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற மகத்தான சாதனையையும் அவர் சமீபத்தில் படைத்தார்.

அப்படி தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதால் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை அவர் உடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சச்சின் 200 போட்டிகளில் 15921 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரராக உலக சாதனை படைத்துள்ளார். எனவே 33 வயதாகும் ரூட் இன்னும் 4 – 5 வருடங்கள் விளையாடி மேற்கொண்டு 4000 ரன்கள் சச்சின் சாதனையை உடைப்பார் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து:

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் உடைப்பாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டுமென ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். அதே சமயம் தற்போது போல தொடர்ந்து விளையாடினால் அதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர் இப்போதும் இளமையாக இருக்கிறார் அல்லவா”

“அவரிடம் வெற்றிக்கான பசி தொடர்ந்து எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை. அதாவது அவர் இந்த நேரத்தில் தெளிவான பசியுடன் இருக்கிறார். ஆனால் அதை அவர் தொடர்ந்து எடுத்துச் செல்ல விருப்பம் இருந்தால் வாய்ப்புள்ளது. அதே சமயம் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலிருந்து அவர் வெளியேறப் போகிறார் அல்லவா” என்று கூறினார்.

- Advertisement -

மைக்கேல் வாகன் கணிப்பு:

அதே நிகழ்ச்சியில் ஜோ ரூட் அந்த சாதனையை உடைக்கவில்லை எனில் தாம் ஆச்சரியப்படுவேன் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதுகில் அவர் பாதிப்புகளை சந்திக்காத வரை வாய்ப்புள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது இருக்கும் ஆர்வம் அவரிடம் திடீரென்று போய்விடும் என்று நான் நினைக்கவில்லை”

இதையும் படிங்க: ஆஸியில் கில்லி.. அந்த 2 விஷயத்துல ஜோ ரூட்டை விட விராட் கோலி சிறந்தவர்.. ஆடம் கில்கிறிஸ்ட் பேட்டி

“எனவே அந்த சாதனையை தனதாக்கும் தொப்பியை அவர் வெளிப்படையாக வைத்திருக்கிறார். அவர் முன் எப்போபோதையும் விட தற்போது தனது ஆட்டத்தை இன்னும் கூடுதலாக அறிந்திருக்கிறார். எனவே அந்த சாதனையை அவர் உடைக்காவிட்டால் நான் ஆச்சரியப்படுவேன். தற்சமயத்தில் அவர் மிகவும் அழகாக விளையாடி வருகிறார்” என்று கூறினார்.

Advertisement