ஆஸியில் கில்லி.. அந்த 2 விஷயத்துல ஜோ ரூட்டை விட விராட் கோலி சிறந்தவர்.. ஆடம் கில்கிறிஸ்ட் பேட்டி

Adam Gilchrist 3
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் 12000 ரன்களை கடந்த அவர் 34 சதங்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்த அவர் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகிய ஃபேப் 4 வீரர்களையும் மிஞ்சியுள்ளார்.

அதனால் விரைவில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் உடைப்பார் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. அத்துடன் விராட் கோலியை விட ரூட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று மைக்கேல் வாகன் போன்ற அந்நாட்டின் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜோ ரூட் இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

விராட் – கோலி ஜோ ரூட்:

மேலும் ஆஸ்திரேலியாவை தவிர்த்து இந்தியா போன்ற உலகின் மற்ற நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவதற்கு ஜோ ரூட் சிறந்த பேட்ஸ்மேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் தங்களுடைய ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட்டை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று கில்கிறிஸ்ட் தேர்ந்தெடுத்துள்ளார். அத்துடன் ஒருநாள், டி20 கிரிக்கெட்டிலும் விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று அவர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய யூடியூப் பேட்டியில் அவர் பேசியது பின்ருமாறு. “ஜோ ரூட்டின் புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருக்கிறது. அதே போல் விராட் கோலியின் புள்ளிவிவரங்களையும் நான் பார்க்கிறேன். இதை நான் இயன் சேப்பல், ரிக்கி பாண்டிங் போன்ற ஆஸ்திரேலியர்கள் பார்வையில் பார்க்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 பேட்டிங் சராசரி மகத்துவத்திற்கான பெஞ்ச மார்க் அல்லவா?”

- Advertisement -

ஆஸியில் கில்லி விராட் கோலி:

“அதே சமயம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நான் விராட் கோலியை தேர்ந்தெடுப்பேன். ஜோ ரூட் நீண்ட காலமாக இங்கிலாந்தின் சிறந்த வீரராக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் ஆஸ்திரேலியாவில் அவர் சதமடித்துள்ளதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் விளையாடிய முதல் போட்டியிலேயே பெர்த் மைதானத்தில் நான் பார்த்த சிறந்த சதத்தை அடித்தார்”

இதையும் படிங்க: இந்தியாவிடம் 150க்கு முடிக்கும் அந்த துருப்பச் சீட்டு இருக்கு.. ஆஸியை ஒருகை பாப்போம்.. சேட்டன் சர்மா பேட்டி

“அந்த வித்தியாசமான சதத்தை அடித்த விராட் கோலியை ஆஸ்திரேலிய மண்ணில் நான் தேர்ந்தெடுப்பேன்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஆஸ்திரேலிய மண்ணில் ரூட் 1 டெஸ்ட் சதம் கூட அடித்ததில்லை. ஆனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் கில்லியாக 6 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். மேலும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ரூட்டை விட விராட் கோலி அதிக ரன்கள் அடித்துள்ளார்.

Advertisement