கடவுள் பொறுப்பில்.. சிஎஸ்கே கோப்பை ஜெயிக்கனும்ன்னா அதை செஞ்சாகனும்.. ருதுராஜுக்கு மைக்கேல் வாகன் அட்வைஸ்

Micheal Vaughan 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனாக விளையாடி வருகிறது. 5 கோப்பைகளை வென்று கொடுத்து வெற்றிகரமான அணியாக சாதனை படைப்பதற்கு முக்கிய பங்காற்றிய ஜாம்பவான் எம்எஸ் தோனி இம்முறை வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்து சாதாரண விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடி வருகிறார்.

அந்த நிலையில் ருதுராஜ் தலைமையில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி 2 தோல்விகளை பதிவு செய்துள்ள சென்னை புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது. எனவே இம்முறை தோனியை போலவே ருதுராஜ் தலைமையில் குறைந்தபட்சம் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஏனெனில் இப்போதும் சில முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவருக்கு தோனி உதவி செய்து வருகிறார்.

- Advertisement -

தடுமாறும் ருதுராஜ்:
ஆனால் ஓப்பனிங்கில் அடித்து நொறுக்க வேண்டிய ருதுராஜ் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் கேப்டன்ஷிப் அழுத்ததால் பேட்டிங்கில் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார் என்றே சொல்லலாம். கடந்த 2021இல் 635 ரன்களை அடித்து ஆரஞ்சு தொப்பி வென்று சென்னை 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் இந்த வருடம் ஆரம்பம் முதலே அதிரடியாக ரன்கள் குவிப்பதற்கு தடுமாறி வருகிறார்.

குறிப்பாக இதுவரை நடந்த 5 போட்டிகளில் ஒரு முறை கூட 150க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்யாத அவர் கேப்டனாக அசத்தினாலும் பேட்ஸ்மேனாக இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் சிஎஸ்கே அணிக்கு கடவுள் போன்ற தோனியிடமிருந்து கேப்டன்ஷிப் பொறுப்பை பெற்ற ருதுராஜ் இன்னும் தன்னிச்சையாக கேப்டனாக செயல்படவில்லை என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் பேட்டிங்கில் அதிரடியாக ரன்கள் எடுத்தால் மட்டுமே உங்களால் கோப்பையை வெல்ல முடியும் என்று அவருக்கு ஆலோசனை தெரிவிக்கும் மைக்கேல் வாகன் க்ரிக்பஸ் இணையத்தில் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர் கடவுளிடமிருந்து பொறுப்பை ஏற்றுள்ளார். இந்த சூழ்நிலை புதிய மேனேஜர் வந்தும் அலெக்ஸ் பெர்குசன் உடைமாற்றும் இருப்பது போல் இருக்கிறது. சென்னை அணியில் இப்போதும் இருக்கும் எம்எஸ் தோனியை கேப்டன்ஷிப் செய்வது கடினமாகும்”

இதையும் படிங்க: கண் அசைவிலேயே தோனி கொடுத்த ஸ்கெட்ச்.. அதை முடித்து கொடுத்த ஜடேஜா – மேட்ச் டர்னிங் ஆன இடமே இதுதான்

“ஆனால் தோனி தான் இந்த முடிவை எடுத்துள்ளார். இருப்பினும் களத்தில் ருதுராஜ் முழுமையாக போட்டியை கட்டுப்படுத்துவதை இன்னும் நான் பார்க்கவில்லை. இந்த நேரத்தில் உங்களால் முடிந்தளவுக்கு அதிக ரன்களை அடியுங்கள் என்பதே அவருக்கு என்னுடைய ஆலோசனையாகும். ஒருவேளை அதைச் செய்தால் அவருடைய அணி இன்னும் நல்ல இடத்தில் இருக்கும். அந்த ரன்கள் உதவியுடன் அணி வெல்லும் போது தான் கேப்டனாக அவராலும் நன்றாக உணர முடியும்” என்று கூறினார்.

Advertisement