கண் அசைவிலேயே தோனி கொடுத்த ஸ்கெட்ச்.. அதை முடித்து கொடுத்த ஜடேஜா – மேட்ச் டர்னிங் ஆன இடமே இதுதான்

Jadeja-Dhoni
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய சென்னை அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. ஏற்கனவே சேப்பாக்கம் மைதானத்தில் முதல் 2 போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த சென்னை அணியானது அடுத்ததாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் தொடர் தோல்வியை சந்தித்தது.

அதன் காரணமாக மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டிய சூழலில் இருந்த சென்னை அணி மிகச்சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டியில் விளையாடிய சென்னை அணி கொல்கத்தா அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா நான்கு ஓவர்கள் வீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டை வீழ்த்தியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் வலுவாக சென்று கொண்டிருந்த கொல்கத்தா அணியை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தோனி ஜடேஜாவை வைத்து போட்ட சில ஸ்மார்ட்டான திட்டங்களே இந்த போட்டியில் சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. அந்த வகையில் இந்த போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி முதல் பந்திலேயே பிலிப் சால்டின் விக்கெட்டை இழந்தது.

- Advertisement -

இருப்பினும் சுனில் நரேன் மற்றும் ரகுவன்ஷி ஆகியோர் மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை கையாண்டு முதல் 6 ஓவர்களின் முடிவில் 56 ரன்களை குவித்து அதிரடியான துவக்கத்தை அளித்தனர். அதே வேகத்தில் அவர்கள் சென்றிருந்தால் நிச்சயம் ரன்குவிப்பு இரட்டிப்பாக மாறியிருக்கும். ஆனால் அப்போது 7-வது ஓவரை வீச வந்த ஜடேஜாவிற்கு தோனி சில ஆலோசனைகளை கண்ணால் வழங்கியது மட்டுமின்றி அந்த திட்டங்களுக்கு ஏற்றது போல் பீல்டிங்கையும் மாற்றி அமைத்தார்.

இதையும் படிங்க : ஃபினிஷராக பாண்டியாவை நம்பாதீங்க.. அவர் ரெடியா இருக்காரு.. 2024 டி20 உ.கோ பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுத்த வெங்கடேஷ் பிரசாத்

அதன் பலனாக முதல் பந்திலேயே ரகுவன்ஷி lbw முறையில் ஆட்டம் இழந்தார். அதனை தொடர்ந்து நரேன் பேட்டிங் செய்ய வரும்போது ஆப் சைடில் பீல்டரை சரியாக நிற்க வைத்து அந்த ஏரியாவில் பந்துவீசுமாறு தோனி கண் காட்டினார். அதனை புரிந்து கொண்டு அவ்வாறே பந்துவீசிய ஜடேஜா நரேனின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இப்படி ஒரே ஓவரில் ஜடேஜா இரண்டு விக்கெட்டை வீழ்த்தவே போட்டி சி.எஸ்.கே அணியின் பக்கம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement