ஃபினிஷராக பாண்டியாவை நம்பாதீங்க.. அவர் ரெடியா இருக்காரு.. 2024 டி20 உ.கோ பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுத்த வெங்கடேஷ் பிரசாத்

Venkatesh Prasad
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை உள்ளது. எனவே வழக்கம் போல இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களுக்கு உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது சிஎஸ்கே அணியில் இளம் வீரர் சிவம் துபே மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்காக 2019இல் அறிமுகமாகி சுமாராக விளையாடிய அவர் பெங்களூரு போன்ற இதர ஐபிஎல் அணிகளிலும் தடுமாறினார். அதனால் கழற்றி விடப்பட்ட அவர் சென்னை அணியில் வாங்கப்பட்டு கடந்த வருடம் கேரியரிலயே உச்சகட்டமாக 35 சிக்ஸருடன் 418 ரன்களை வெளுத்து வாங்கி 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

பாண்டியாவுக்கு இடமில்லை:
அதனால் இந்திய அணியில் கம்பேக் கொடுத்த அவர் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2024 ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் வெற்றிகளில் பங்காற்றினார். அதே ஃபார்மில் இந்த ஐபிஎல் தொடரிலும் அசத்தும் அவர் இதுவரை 5 போட்டியில் 176 ரன்களை 160.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ளார். எனவே அவர் டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று யுவராஜ் சிங், சேவாக் போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் ஃபினிஷராக செயல்படுவதற்கு ரிங்கு சிங் தயாராக உள்ளதாக வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார். அதனால் சுமாராக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவை கழற்றி விட்டுள்ள அவர் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், சிவம் துபேவுடன் டாப் ஆர்டரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியையும் தேர்ந்தெடுத்துள்ளார்.

- Advertisement -

எனவே இப்போதைக்கு விக்கெட் கீப்பர் யார் என்பதை மட்டுமே கண்டறிய வேண்டியுள்ளதாக தெரிவிக்கும் வெங்கடேஷ் பிரசாத் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஸ்பின்னர்களுக்கு எதிராக சிவம் துபேவிடம் ஸ்ட்ரைக் செய்யும் திறமை இருக்கிறது. சூரியகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். ரிங்கு சிங்கிடம் அற்புதமான ஃபினிஷிங் செய்யும் திறமை இருக்கிறது”

இதையும் படிங்க: போன வருஷம் என்னோட முதுகில் குத்துன ஆளு நீங்க.. நாசர் ஹுசைனை கலாய்த்த டிகே.. காரணம் என்ன?

“எனவே 2024 டி20 உலகக் கோப்பையில் இந்த 3 வீரர்களுடன் எஞ்சிய 11 வீரர்களை இந்தியா கண்டறிவது சிறப்பானதாக இருக்கும். விராட் மற்றும் ரோஹித்துடன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான இடம் மட்டுமே இருக்கிறது. அது எப்படி செல்லும் என்பதை பார்ப்பது சுவாரசியமானதாக இருக்கும்” என்று கூறினார். அந்த வகையில் பாண்டியாவை கழற்றி விட்டி உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் பேட்டிங் வரிசையையே அவர் மறைமுகமாக தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement