போன வருஷம் என்னோட முதுகில் குத்துன ஆளு நீங்க.. நாசர் ஹுசைனை கலாய்த்த டிகே.. காரணம் என்ன?

Dinesh Karthik and Nasser Hussain
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தன்னுடைய முதல் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் தவிக்கும் அந்த அணி வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முன்னதாக இந்த வருடம் பெங்களூரு அணிக்காக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இதுவரை 5 போட்டிகளில் 90* ரன்களை 173 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள அவர் பஞ்சாப்புக்கு எதிராக கடைசி நேரத்தில் 28 (10) ரன்கள் அடித்து ஃபினிஷிங் செய்து பெங்களூருவை வெற்றி பெற வைத்தார். ஆனால் கடந்த வருடம் சுமாராக செயல்பட்ட அவர் இந்த வருடம் டி20 உலகக் கோப்பை வருகிறது என்று தெரிந்ததும் இப்படி அசத்துவதாக ரசிகர்கள் கிண்டலடித்தனர்.

- Advertisement -

கலாய்த்த டிகே:
ஏனெனில் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் இதே பெங்களூரு அணியில் 2022 சீசனில் அதிரடியாக 330 ரன்கள் அடித்ததால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக தேர்வாகினார். இந்நிலையில் அதே போல இந்த வருட ஐபிஎல் தொடரில் அசத்தும் தினேஷ் கார்த்திக் 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசினார்.

ஆனால் அவருக்கு சிரித்துக் கொண்டே தினேஷ் கார்த்திக் பதிலடி கொடுத்தது பின்வருமாறு. “நாசர் நீங்கள் சொன்ன வார்த்தையை நான் நம்பப் போவதில்லை. ஒரு மனிதராகவும் கேட்பராகவும் பேட்ஸ்மேனாகவும் நாசர் என்னை விரும்புவதில்லை. இப்போது தான் முதல் முறையாக அவர் என்னை நன்றாக அடித்தீர்கள் என்று கூறியுள்ளார். ஆனால் இந்திய அணியில் விளையாட 6 விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்ய சொன்னால் அவர் என்னை 8வதாக தேர்ந்தெடுப்பார்”

- Advertisement -

“கடந்த வருடம் நடந்த உலகக் கோப்பையில் இந்த உலகிலேயே அவர் மட்டும் தான் நான் இந்திய அணியில் விளையாடக்கூடாது என்று விரும்பினார். கடந்த வருடம் என்னை பேட்டி எடுத்த நாசர் ஹுசைன் இந்திய அணியில் ரிஷப் பண்ட் எங்கே என்று கேள்வியை எழுப்பி முதுகில் குத்தியது தலைப்பு செய்தியாக வந்தது. எனவே என்னிடம் நல்லவர் போல் நடந்துக்கொள்ள முயற்சிக்காதீர்கள் நாசர்”

இதையும் படிங்க: ஏற்கனவே 2 மேட்ச் சேப்பாக்கத்தில் களமிறங்காத தோனி நேற்று வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே இருந்த நிலையில் – களமிறங்கியது ஏன்?

“ஒருவேளை 10 போட்டிகளுக்குப் பின் அவர் எனக்கு மோதிரம் கொடுத்து நீங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தீர்கள் என்று இரண்டாவதாக நினைப்பதாக சொல்லலாம். இருப்பினும் இந்த தொடரில் எனக்கு நல்ல துவக்கம் கிடைத்துள்ளது” என்று நேருக்கு நேராக நாசர் ஹுசைனை கலாய்த்து பேசினார். அதை கேட்டு மற்றொரு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆதர்டன் சிரித்து மகிழ்ந்தார்.

Advertisement