
இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்ட ஆரம்பத்தில் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே செயல்பட்டு வந்தார். அவருக்கும் கேப்டன் கோலிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு அதன் காரணமாக பல சர்ச்சைகள் இருந்தது. அதன் பின்னர் அனில் கும்ப்ளே தானாக முன்வந்து தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு கோலியின் ஒத்துழைப்போடு ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இவர்களின் கூட்டணியில் இந்திய அணி சிறப்பான பல சாதனைகளை நிகழ்த்தியது. ஆனாலும் ஐசிசி தொடரை கைப்பற்ற முடியாதது மட்டுமே ஒரு குறையாக உள்ளது. அதுதவிர இந்தக்கூட்டணி பல வெற்றிகளை பெற்றுவருகிறது. மேலும் ரவி சாஸ்திரிக்கு பதவிக்காலம் முடிந்த பின்னரும் கூட தற்போது 2021 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர் வரை பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணி இவர்கள் இருவரது தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது இவர்கள் இருவருரது கூட்டணி குறித்து பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மைக்கல் ஸ்லேட்டர் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவர் குறித்தும் கூறுகையில் :
இருவரும் தங்களுக்கு மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசிக் கொள்கின்றனர். அதனால்தான் இந்திய அணி தற்போது ஆரோக்கியமான வளர்ச்சியை எட்டியுள்ளது. மேலும் கோலி ஒரு கருத்தை முன்வைக்கும்போது ரவிசாஸ்திரி அதற்கு கவனம் கொடுத்து சம்மதம் தெரிவிக்கிறார். அணியில் உள்ள மற்ற வீரர்களும் உடன்படுகிறார்கள். எனவே இவர்கள் இருவரும் எடுக்கும் முடிவு சரியானதாக அமைகிறது.
ரவிசாஸ்திரி உடன் வர்ணனையாளராக பணியாற்றி இருக்கிறேன். அந்த சமயத்தில் அவரது குணத்தை பற்றி நன்றாக தெரிந்து கொண்டேன். அவர் என்னுடைய நெருங்கிய நண்பர் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு அற்புதமான மனிதன் என்று கூறினார். வீரர்களை ஊக்குவிப்பதில் ரவிசாஸ்திரி கைதேர்ந்தவர். வீரர்கள் எப்போதும் சோர்வாக இருந்தாலும் அவர்கள் அருகில் சென்று அவர்களின் பிரச்சனை என்ன என்பதை கேட்டு அறிந்துகொள்கிறார்.
அதற்கேற்றாற் போல் அறிவுரைகளை வழங்குவார். அவ்வாறு அவர் கூறும் அறிவுரைகளால் வீரர்களும் நம்பிக்கையைப் பெற்று சிறப்பாக விளையாடுகிறார்கள். எனவே இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகிய இருவருமே அணியை சிறப்பாக வழி நடத்துகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.