டி20 உலகக்கோப்பை : ரூல்ஸை மீறியதால் தடைசெய்யப்பட்ட அம்பயர் – யார் அந்த அம்பயர் தெரியுமா ?

Gough

கடந்த அக்டோபர் 17ஆம் தேதி துவங்கிய டி20 உலக கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்றில் விறுவிறுப்பாக இந்த தொடரானது சென்றுகொண்டிருக்கும் வேளையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அம்பயர் ஒருவர் இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்க கூடாது என்று கிரிக்கெட் வாரியத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

gough 1

அதன்படி 41 வயதான இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் பேட்ஸ்மேன் மைக்கல் ஹாக் இந்த தொடரில் நடுவராக பணியாற்றி வந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான அம்பயர்களில் ஒருவராகத் திகழும் அவர் பலத்த கட்டுப்பாடுகளுக்கு இடையே இந்த தொடரில் நடுவராக பணிபுரிந்து வந்தார்.

- Advertisement -

ஆனால் இதனையும் மீறி பயோ பபுளை விட்டு அவர் வெளியே சென்று வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அனுமதி இல்லாமல் வெளி இடத்திற்கு சென்று மீண்டும் பணிக்குத் திரும்பியதன் காரணமாக அவர் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக தற்போது தடை செய்யப்பட்டு உள்ளார்.

இதையும் படிங்க : இந்திய அணியில் பிளவு : விராட் கோலிக்கு எதிராக செயல்படுபவர்கள் குறித்து பேசிய அக்தர் – விவரம் இதோ

இந்த உலக கோப்பை தொடரின் மீதியுள்ள போட்டிகளில் அவர் பணியாற்ற தடை விதிக்கப்பட்டதோடு ஆறு நாட்கள் குவாரண்டைன் இருக்குமாறும் அவருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அவர் நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. மேலும் எஞ்சியுள்ள இந்த தொடரில் உள்ள ஆட்டங்களில் அவர் அம்பயராக பணியாற்ற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement