இந்திய அணியில் பிளவு : விராட் கோலிக்கு எதிராக செயல்படுபவர்கள் குறித்து பேசிய அக்தர் – விவரம் இதோ

Akhtar
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் கடந்த இரண்டு போட்டிகளிலும் மோசமான தோல்வியை தழுவி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை கூட இந்திய அணி கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் இந்த மோசமான ஆட்டம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களைக் கூறி வர பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் இந்திய அணியில் பிளவு உள்ளது என்று கூறியுள்ளார்.

varun 1

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்திய அணிக்குள் இரு பிரிவுகள் செயல்படுகின்றன. ஒன்று விராட் கோலிக்கு ஆதரவாகவும், மற்றொன்று விராத் கோலிக்கும் எதிராகவும் செயல்படுகிறார்கள் என கருதுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : எனக்கு இந்திய அணியில் ஏன் இந்த பிளவு ஏற்பட்டது என்று தெரியாது. டி20 ஓவர் உலகக்கோப்பை முடிந்த பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் இந்த பிளவு ஏற்பட்டு இருக்கலாம் அல்லது கடந்த இரண்டு போட்டிகளில் தவறான முடிவுகளை எடுத்தார் என்பதற்காக கூட ஏற்பட்டு இருக்கலாம்.

Williamson

ஆனால் உண்மை என்பது என்ன என்பது தெரியவில்லை. கோலி மிகச்சிறந்த வீரர் அவரை நாங்கள் மதிக்கிறோம் என்றுக் அக்தர் கூறியுள்ளார். மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது டாசில் தோல்வி அடைந்த போதே போட்டியில் தோல்வி அடைந்ததாக இந்திய அணி வீரர்கள் மனரீதியாக நம்பிக்கை இழந்துவிட்டனர்.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க மட்டும் என்ன கொறஞ்சவங்களா ? இந்திய அணியை வீழ்த்தி காட்டுவோம் -சவால் விட்ட ஆப்கான் வீரர்

ஆனால் டாஸில் தோற்றால் போட்டியில் தோற்றது போல் கிடையாது. நிச்சயம் நல்ல நம்பிக்கையுடன் திட்டமிட்டு சிறப்பாக ஆடியிருந்தால் அ.ந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்க முடியும் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement