நாங்க மட்டும் என்ன கொறஞ்சவங்களா ? இந்திய அணியை வீழ்த்தி காட்டுவோம் -சவால் விட்ட ஆப்கான் வீரர்

Afg
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது இதுவரை இந்திய அணிக்கு மோசமாகவே அமைந்துள்ளது. ஏனெனில் இந்த தொடர் ஆரம்பிக்கும் முன்னர் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணியானது தற்போது அரையிறுதிக்கு முன்னேறுவதே கேள்விக்குறியாகி உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்திலும், அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும் படுதோல்வியை சந்தித்தது.

Williamson

- Advertisement -

இந்த இரண்டு மோசமான தோல்விகள் காரணமாக இந்திய அணியின் ரன்ரேட் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இனிவரும் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக இந்திய அணி பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற ஒரு வாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது.

இந்த போட்டி குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வரும் வேளையில் ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹமீத் ஹாசன் இந்தியாவை தோற்கடிக்கும் வலிமை ஆப்கானிஸ்தான் அணியிடம் உள்ளது என்று தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள தகவலில் கூறியதாவது :

hamid

இந்திய அணியை வீழ்த்தும் அளவிற்கு போதுமான திறன் எங்களிடம் உள்ளது. நாங்கள் முதலில் பேட்டிங் செய்து தேவையான அளவு ரன்களை குவித்து விட்டால் எங்களிடம் உள்ள பவுலிங் பவர் மற்றும் பீல்டிங் ஆகியவற்றை வைத்து இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று நம்புகிறேன். இப்போது உள்ள ஒரே இலக்கு எங்களுக்கு என்னவெனில் அரையிறுதிக்கு முன்னேறுவது மட்டும் தான்.

- Advertisement -

இதையும் படிங்க : தொடர் தோல்விகளின் எதிரொலி : விராட் கோலியின் பியூசை புடுங்கவுள்ள பி.சி.சி.ஐ – அதிரடி அறிவிப்பு

எங்கள் அணியிலும் நல்ல தலைசிறந்த வீரர்கள் சிலர் இருக்கின்றனர். நிச்சயம் எங்களது பலத்தை வைத்து நாங்கள் இந்திய அணி வீரர்களை ஆட்டமிழக்க வைத்து வெற்றிக்காக முயற்சிப்போம் என ஹமீது ஹாசன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement