ஒரு போட்டியில் தோற்றதால் குறைச்சு எடை போட்டு அவர டீம விட்டு தூக்க நினைக்காதீங்க – நட்சத்திர இந்திய வீரருக்கு கிளார்க் ஆதரவு

Clarke
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டனில் நடைபெற்று முடிந்த 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக வெறும் கையுடன் நாடு திரும்பியுள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. அந்தப் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் அதை சரியாக பயன்படுத்தாத கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் இருந்த 5 இடது கை பேட்ஸ்மேன்கள் அச்சுறுத்தலை கொடுக்கக் கூடிய தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஷ்வினை சுழலுக்கு சாதகமான ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தேர்வு செய்யாதது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

TEam India Rohit Sharma

- Advertisement -

அது போக கேப்டனாக முன்னின்று மாபெரும் ஃபைனலில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய அவர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தியது தோல்வியை கொடுத்தது. முன்னதாக 2016 – 2021 வரை தொடர்ந்து இந்தியாவை உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்த விராட் கோலி உலக கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதற்காக சர்ச்சைக்குரிய முறையில் பதவி விலகிய போது 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற காரணத்தால் ரோகித் சர்மா பொறுப்பேற்றார்.

கிளார்க் ஆதரவு:
அவரது தலைமையில் வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் வென்று தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக முன்னேறினாலும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்தியா தற்போது இந்த ஃபைனலிலும் தோல்வியை சந்தித்து எந்த மாற்றத்தை முன்னேற்றத்தையும் காணவில்லை என்பதை நிரூபித்துள்ளது. அது போக ஹிட்மேன் என்ற பெயருக்கேற்றார் போல் அதிரடி காட்ட முடியாமல் சமீப காலங்களாகவே தடுமாறும் ரோகித் சர்மா சுமாரான ஃபிட்னஸ் கடைபிடித்து அடிக்கடி காயத்தை சந்திப்பதையும் ஓய்வு பெறுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

Rohit Sharma 1

அதன் காரணமாக ஏற்கனவே ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்கும் வேலையை தொடங்கியுள்ள பிசிசிஐ 2023 உலக கோப்பைக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டிலும் 2023 டிசம்பர் மாதம் நடைபெறும் தென்னாப்பிரிக்க தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் புதிய கேப்டனை நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு தோல்வியால் ரோகித் சர்மாவை குறைத்து மதிப்பிட்டு உடனடியாக எந்த முடிவையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் விமர்சனங்களுக்கு மத்தியில் ஆதரவு கொடுத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கேப்டனாக பொறுப்பேற்ற பின் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளார். அத்தொடரில் அவர் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாகவே செயல்பட்டார். குறிப்பாக கடந்த தொடரில் அவர் அடித்த சத்தத்தை பற்றி யோசித்துப் பாருங்கள். எனவே ஃபைனல் எனும் ஒரு போட்டியில் சந்தித்த தோல்வி அவரை மோசமான கேப்டனாகவும் இந்தியாவை மோசமான அணியாகவும் மாற்றி விடாது. அதே சமயம் அடுத்தடுத்த ஃபைனல்களுக்கு தகுதி பெறுவது அவ்வளவு எளிதல்ல”

Micheal Clarke IND vs AUS

“அப்படியென்றால் கடந்த 4 வருடங்களாக இந்திய அணி மட்டுமே தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று அர்த்தமாகும். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இவ்வாறு தொடர்ந்து அசத்தலாக செயல்படுவது கடினம் என்பதால் எந்த ஒரு கடினமான முடிவையும் எடுப்பதற்கு முன்பாக யோசித்துக் கொள்ளுங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும் ரோகித் சர்மா மீது நம்பிக்கை வைக்கும் நான் அவர் நல்ல கேப்டன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அவருடைய ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் எனக்கு பிடித்துள்ளது”

இதையும் படிங்க:வீடியோ : அதான் பல்ப் வாங்கிட்டாரே அப்றம் என்ன? இங்கிலாந்து வீரரை தாறுமாறாக புகழ்ந்த பீட்டர்சன் – பாண்டிங் பதிலடி

“மேலும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக வெற்றிகரமாக செயல்பட்டுள்ள அவர் இந்த ஃபைனலில் தோல்வியை சந்தித்தார் என்பதற்காக இந்தியாவை வழி நடத்துவதற்கு தகுதியற்றவர் என்று அர்த்தமாகாது. சொல்லப்போனால் மீண்டும் ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா கடந்த 4 வருடங்களில் எந்தளவுக்கு அசத்தியிருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். எனவே ஒருநாள் உலகக் கோப்பை வரும் சமயத்தில் நிதானமான முடிவை எடுப்பது முக்கியமாகும்” என்று கூறினார்.

Advertisement