வீடியோ : அதான் பல்ப் வாங்கிட்டாரே அப்றம் என்ன? இங்கிலாந்து வீரரை தாறுமாறாக புகழ்ந்த பீட்டர்சன் – பாண்டிங் பதிலடி

Kevin Pieterson Ponting
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அதிரடியாக செயல்பட்டு 393/8 ரன்கள் குவித்து முதல் நாளிலேயே டிக்ளர் செய்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 118* ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 78 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா கடுமையாக போராடியும் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா சதமடித்து 141 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஸ்டுவர்ட் ப்ராட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 7 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் நிதானத்தை வெளிப்படுத்தாமல் 273 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் மற்றும் ஹரி ப்ரூக் ஆகியோர் தலா 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கமின்ஸ் மற்றும் நேதன் லயன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 281 ரன்களை துரத்தி வரும் ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் 36, லபுஸ்ஷேன் 13, ஸ்மித் 6 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் பெவிலியன் திரும்பிய நிலையில் கவாஜா 34* ரன்களுடன் சவாலை கொடுத்து வருகிறார்.

- Advertisement -

பாண்டிங் பதிலடி:
எனவே 107/3 ரன்களுடன் விளையாடி வரும் அந்த அணிக்கு கடைசி நாளில் 174 ரன்கள் வெற்றிக்கு தேவைப்படும் நிலையில் இங்கிலாந்துக்கு 7 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. முன்னதாக ப்ரெண்டன் மெக்கல்லம் – பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளை அடித்து நொறுக்கி தொடர் வெற்றிகளை பெற்று வரும் இங்கிலாந்து இந்த போட்டியில் முதல் நாளிலேயே ஜோ ரூட் 118* ரன்கள் எடுத்தும் 400 – 450 ரன்களை குவிக்கும் வாய்ப்பை வேண்டுமென்றே நழுவ விட்டு தைரியமாக டிக்ளர் செய்தது.

ஒருவேளை இன்றைய நாளில் இங்கிலாந்து தோற்றால் நிச்சயமாக அதற்கான காரணம் அதுவாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதை விட நவீன கிரிக்கெட்டில் ஏற்கனவே 11,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து கிளாஸ் நிறைந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் ஜோ ரூட் சமீப காலங்களாகவே ரிவர்ஸ் ஸ்கூப் போன்ற வித்தியாசமான ஷாட்டுகளை அடித்து வியக்க வைக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக இந்த போட்டியில் 2வது இன்னிங்ஸில் 4வது நாளின் முதல் ஓவரிலேயே 3 ஸ்லிப் ஃபீல்டர்கள் கேட்ச் பிடிக்க தயாராக இருந்த நிலையில் 0 ரன்களில் இருந்தும் கொஞ்சம் கூட பயப்படாமல் விக்கெட் கீப்பருக்கு பின் சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து அசத்தினார்.

- Advertisement -

ஆனால் தற்போதுள்ள நல்ல ஃபார்முக்கு வழக்கமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தாலே மீண்டும் சதமடித்திருக்க கூடிய அவர் அதிரடியாக விளையாட முயற்சித்து 46 ரன்களில் அவுட்டானதும் இங்கிலாந்து 300க்கு குறைவான இலக்கை நிர்ணயித்து பின்னடைவை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தது. அந்த நிலையில் நேற்றைய போட்டியின் முடிவில் ஜோ ரூட் ஆஸ்திரேலியாவை வலுக்கட்டாயமாக தான் நினைத்தது போல் ஃபீல்டிங்கை மாற்ற வைத்ததாக முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் புகழ்ந்து தள்ளினார்.

அப்போது அருகிலிருந்த ரிக்கி பாண்டிங் உங்களுடைய கருத்து சரி தான் ஆனால் அதே ஸ்டைலில் பெரிய இலக்கை நிர்ணயிக்காமல் ஜோ ரூட் 40 ரன்களுடன் அவுட்டாகி விட்டதாக உடனுக்குடன் தக்க பதிலடி கொடுத்தார். இது பற்றி பீட்டர்சன் பேசிட்டு பின்வருமாறு. “ஜோ ரூட் இந்த போட்டியில் ஆட்சி செய்கிறார். இந்த போட்டியை நடத்தும் அவர் தரமான தரத்தில் தன்னுடைய இடைவெளியை தீர்மானிக்கிறார். குறிப்பாக என்ன செய்யலாம்? என ஆஸ்திரேலியா தங்களுடைய தலையை சொரிந்து கொள்ளும் அளவுக்கு மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ் விளையாடினார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:வீடியோ : அநாகரிகமற்ற இங்கிலாந்து ரசிகர்கள், ஸ்மித் – வார்னரை கேவலமான சொற்களால் திட்டி கிண்டல், அவர்களின் ரியாக்சன் இதோ

அதற்கு பாண்டிங் கிண்டலாக பதிலளித்தது பின்வருமாறு. “சரி தான். அவர் தற்போது அவுட்டாகி விட்டார். அவர் வெறும் 40 ரன்களை மட்டுமே எடுத்தார்” என்று கூறினார்.

Advertisement