இந்திய அணியின் இளம் வீரரான இவர் தோனி மற்றும் கில்க்ரிஸ்ட் ஆகியோரின் கலவை – மைக்கல் கிளார்க் புகழாரம்

Clarke

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களை குவிக்க இந்திய அணி 336 ரன்களை குவித்தது இதன் மூலம் 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 294 ரன்களை அடித்து இரண்டாவது இன்னிங்சை முடித்துக் கொண்டது. அதன் பின்னர் 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

siraj

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்த வரை 300 ரன்களுக்கு மேல் அடிப்பது என்பது எப்போதும் சவாலான ஒரு விடயம் தான். அந்த வகையில் இந்த சவாலை விரட்டிய இந்திய அணி இன்று அசத்தலாக பேட்டிங்கை விளையாடி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக துவக்க வீரரான ரோகித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற தனது பொறுப்பை உணர்ந்து விளையாடிய கில் 91 ரன்கள் குவித்து சிறப்பான துவக்கம் கொடுத்தார்.

அதன்பின்னர் புஜாரா அரைசதம் அடித்தும், ரஹானே 24 ரன்கள் குவித்தும் ஓரளவு மிடில் ஓவர்களில் தாக்கு பிடித்தனர். இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கடந்த போட்டியில் விளையாடியதைப் போலவே இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 138 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 89 ரன்களை அடித்தார்.

pant

தமிழக சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் 29 பந்துகளை சந்தித்த நிலையில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 22 ரன்களை அடித்தார். இவர்கள் இருவரும் இறுதியில் காண்பித்த அதிரடி மூலம் இந்திய அணி பெரிய இலக்கினை சேஸிங் செய்து வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றியை பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் கிளார்க் இந்த தொடர் குறித்தும் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் குறித்தும் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை தவிர மற்ற போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. அதிலும் குறிப்பாக 23 வயதான ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடினார். நான் அவரை ஒரு சூப்பர் ஸ்டாராக தான் பார்க்கிறேன்.

Pant

முதல் டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடி இருந்தால் இந்திய அணிக்கு அது நல்ல விடயமாக அமைந்திருக்கும். சில கேட்ச்களை அவர் தவற விட்டாலும் பேட்டிங்கில் எந்த குறையும் இல்லை தோனி ஸ்டைலில் அவர் விளையாடியது போல இருந்தது. டோனியின் இடத்தை நிரப்ப அவரிடம் தகுதி உள்ளது. மேலும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன கில்கிறிஸ்ட் பாணியிலும் அவர் விளையாடி வருகிறார் என கிளார்க் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.