- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவங்ககிட்ட வீக்னெஸ் இருக்கு.. இந்த ரிஸ்க் எடுக்கும் இந்தியா டி20 உ.கோ ஜெய்ப்பாங்க.. மைக்கேல் கிளார்க்

ஜூன் மாதம் இரண்டாம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கோலாகலமாக நடைபெற உள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை நிர்ணயிக்கப் போகும் இந்த தொடரில் உலகின் டாப் 20 கிரிக்கெட் அணிகள் விளையாடுகின்றன. அந்த அணிகளுக்கு சவாலை கொடுத்து இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

சொல்லப்போனால் முதலும் கடைசியுமாக 2007 டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வென்றது. அதன் பின் 17 வருடங்களாகியும் 2வது கோப்பையை வெல்ல முடியாமல் திணறும் இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10 வருடமாக ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே இம்முறை அதற்கு முற்றுப்புள்ளி வைத்து கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் இந்தியா களமிறங்குகிறது.

- Advertisement -

கிளார்க் கணிப்பு:
ஆனால் வழக்கம் போல இம்முறையும் ஆஸ்திரேலியா அணி அதற்கு தடையாக இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். ஏனெனில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. இந்நிலையில் 4 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்து இந்தியா ரிஸ்க் எடுத்துள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

ஆனால் அது வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலைகளுக்கு சரியாக பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் அதே துறையில் ஆஸ்திரேலியா பலவீனத்தை கொண்டுள்ளதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணியாக இந்தியா இருக்கிறது”

- Advertisement -

“ஏனெனில் அவர்கள் சமீபத்தில் கிரிக்கெட்டை விளையாடிய தயாரான விதம் சிறப்பாக உள்ளது. அமெரிக்கா மற்றும் கரீபியன் சூழ்நிலைகள் வித்தியாசமானதாக இருக்கும். ஆனால் அங்கே நிறைய ஒற்றுமைகளும் இருக்கிறது. எனவே அவர்களுடைய வீரர்கள் அதை பயன்படுத்திக் கொள்வார்கள். அதிகப்படியான ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்து இந்தியா ரிஸ்க் எடுத்துள்ளது என்று நான் நினைக்கிறேன்”

இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பை இந்தியா பாகிஸ்தான் போட்டிகளுக்கான பாதுகாப்பு அதிகரிப்பு – என்ன காரணம்

“அது ஆஸ்திரேலிய அணியை விட மிகவும் வித்தியாசமானது. இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் கால சூழ்நிலைகளில் நான் விளையாடியுள்ளேன். அங்கு நீங்கள் சுழலை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்பது வெற்றியில் பெரிய பங்காற்றும். எனவே இந்த உலகக் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற விவாதத்தில் இந்தியா அச்சுறுத்தலை கொடுக்கும் அணியாக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் இந்திய அணியினர் முழுமையாக விளையாடி இங்கே வருகின்றனர். அவர்களை ஒப்பிடும் போது சமீபத்தில் அதிகப்படியான கிரிக்கெட்டில் விளையாடாதது ஆஸ்திரேலியாவின் பலவீனம் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -