பழியை போடாதீங்க.. விராட் கோலி கிடையாது.. ஆர்சிபி தோல்விக்கு அது தான் காரணம்.. மைக்கேல் கிளார்க்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய 5வது போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் பரிதாபமாக தோற்றது. இந்த தோல்விக்கு விராட் கோலி தான் காரணம் என்று வழக்கம் போல ஒரு தரப்பு ரசிகர்கள் மனசாட்சின்றி விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு போராடி 183/3 ரன்கள் அடித்தது.

குறிப்பாக விராட் கோலி துவக்க வீரராக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் நங்கூரமாக செயல்பட்டு 12 பவுண்டரி 4 சிக்சருடன் 113* (72) ரன்களை 156.94 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார். ஆனால் கேப்டன் டு பிளேஸிஸ் 44, மேக்ஸ்வெல் 1, கேமரூம் க்ரீன் 5* என எதிர்புறம் வந்த அனைத்து பேட்ஸ்மேன்களும் சேர்ந்து வெறும் 70 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

- Advertisement -

கிளார்க் பதிலடி:
மறுபுறம் 184 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு சுமாராக பந்து வீசிய பெங்களூரு பவுலர்களை அடித்து நொறுக்கிய ஜோஸ் பட்லர் சதமடித்து 100* (58), சஞ்சு சாம்சன் 69 (42) ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். ஆனால் அதையெல்லாம் பேசாத விமர்சகர்கள் 67 பந்துகளில் ஐபிஎல் தொடரில் மெதுவான சதத்தை அடித்த வீரராக சாதனை படைத்ததால் விராட் கோலி சுயநலத்துடன் விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்ததாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தினேஷ் கார்த்திகை முன்கூட்டியே களமிறக்காததே தோல்விக்கு காரணம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பெங்களூரு அணியின் தோல்விக்காக நான் விராட் கோலி மீது விரலை நீட்ட மாட்டேன். அவர் புத்திசாலித்தனமாக விளையாடினார். அவரை சுற்றி வந்த பேட்ஸ்மேன்கள் போதுமான ரன்கள் எடுக்கவில்லை”

- Advertisement -

“அதன் காரணமாக போதுமான நம்பிக்கையுடன் போதுமான சுதந்திரத்துடன் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அவர் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாட வேண்டிய வேலையில் கச்சிதமாக செயல்பட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் ஆர்சிபி அணி களத்தில் 15 ரன்கள் எடுக்காமல் தவற விட்டது. அவர்களுடைய சில முடிவுகளை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது”

இதையும் படிங்க: அவரு போட்ட ஒரு ஓவர் தான் நாங்க தோத்ததுக்கு காரணம்.. எல்லாமே அங்கதான் மாறிச்சி – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

“உங்களிடம் தினேஷ் கார்த்திக் ஃபினிஷராக இருக்கிறார். அவர் மேக்ஸ்வெல்க்கு பின் ஏன் பேட்டிங் செய்ய வரவில்லை? என்பது எனக்கு தெரியவில்லை. அவர் கண்டிப்பாக கேமரூன் கிரீனுக்கு முன்னதாக பேட்டிங் செய்ய வந்திருக்க வேண்டும். எனவே அது புரிந்து கொள்ள முடியாத வித்தியாசமான முடிவாகும்” என்று கூறினார். அந்த வகையில் அணிக்காக கடினமாக போராடியும் சுயநலவாதி என்னும் பெயரை விராட் கோலி சம்பாதிப்பது ஆர்சிபி ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement