அவரு போட்ட ஒரு ஓவர் தான் நாங்க தோத்ததுக்கு காரணம்.. எல்லாமே அங்கதான் மாறிச்சி – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

Faf
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்ற 19-வது லீக் போட்டியில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய பெங்களூரு அணியானது இந்த தொடரில் தங்களுக்கு நான்காவது தோல்வியை பதிவு செய்து நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் புள்ளி பட்டியலில் எட்டாம் இடத்திற்கு பின் தங்கியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி சார்பாக விராட் கோலி அதிகபட்சமாக 113 ரன்களையும், டூபிளெஸ்ஸிஸ் 44 ரன்களையும் குவித்தனர். பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி ரன் எதுவும் எடுக்காமல் முதல் விக்கெட்டை இழந்தது.

- Advertisement -

இருப்பினும் அடுத்ததாக இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் 148 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றியை அப்போதே உறுதி செய்தனர். பின்னர் சாம்சன் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய வேளையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பட்லர் 100 ரன்கள் அடித்து ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் 19.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் கூறுகையில் : முதல் இன்னிங்ஸ்ஸின் போது இந்த மைதானத்தில் ரன்களை சேர்க்க கடினமாக இருந்தது.

- Advertisement -

என்னை பொறுத்தவரை 190 ரன்கள் என்பது போதுமான ஒன்றுதான். இருப்பினும் 10 முதல் 15 ரன்கள் வரை கூடுதலாக அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது சரியான முடிவு. ஏனெனில் டியூ இருக்கும் போது இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்வது ஈஸியாக இருக்கும். நாங்கள் முதல் நான்கு ஓவரில் சிறப்பாக பந்து வீசியதாக நினைக்கிறோம்.

இதையும் படிங்க : மிஸ்டர் ஐபிஎல் சுரேஷ் ரெய்னாவின் ஆல் டைம் சாதனையை தூளாக்கிய விராட் கோலி.. புதிய உலக சாதனை

மாயங்க் டாகர் வீசிய ஒரு ஓவரில் 20 ரன்கள் சென்றது தான் எங்களது மைனஸாக அமைந்தது. அப்போது தான் எங்களிடம் இருந்து போட்டி அவர்கள் பக்கம் திரும்பியது. களத்தில் பட்லர் மற்றும் சாம்சன் ஆகிய வலதுகை ஆட்டக்காரர்கள் இருந்ததாலே மேக்ஸ்வெல்லுக்கு ஓவர் வழங்காமல் இரண்டு இடது கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பை வழங்கினோம். ஆனால் இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சு எடுபடாமல் போனதே தோல்விக்கு காரணம் என டூபிளெஸ்ஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement