மிஸ்டர் ஐபிஎல் சுரேஷ் ரெய்னாவின் ஆல் டைம் சாதனையை தூளாக்கிய விராட் கோலி.. புதிய உலக சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது. ஆனால் இதுவரை விளையாடி 5 போட்டிகளில் 4 தோல்வியை பதிவு செய்துள்ள அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் திணறி வருகிறது. குறிப்பாக ஏப்ரல் 6ஆம் தேதி ராஜஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு பரிதாபமாக தோற்றது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு விராட் கோலி 113*, கேப்டன் டு பிளேஸிஸ் 44 ரன்கள் எடுத்த உதவியுடன் 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் சதமடித்து 100* (58) ரன்கள் குவித்தார். அவருடன் கேப்டன் சஞ்சு சாம்சன் 69 (42) ரன்கள் எடுத்ததால் 19.1 ஓவரிலேயே ராஜஸ்தான் எளிதாக வென்றது.

- Advertisement -

என்றும் கிங் கோலி:
அதனால் 4 போட்டிகளில் 4வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. மறுபுறம் மற்ற வீரர்கள் கை கொடுத்த தவறியதால் 12 பவுண்டரி 4 சிக்சருடன் 113* (72) ரன்களை 156.94 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்த விராட் கோலியின் போராட்டம் மீண்டும் வீணானது ஆர்சிபி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

குறிப்பாக பேட்டிங்கில் விராட் கோலி மட்டும் தனி ஒருவனாக 113* ரன்கள் எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் சேர்ந்து வெறும் 70 ரன்கள் மட்டுமே அடித்தனர். அதே போல சஞ்சு சாம்சன் – ஜோஸ் பட்லர் 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் போடும் அளவுக்கு பந்து வீச்சில் சுமாராக செயல்பட்ட ஆர்சிபி பவுலர்கள் வெற்றி பறிபோவதற்கு முக்கிய காரணமாக அமைந்தனர். இருப்பினும் தம்மால் முடிந்தளவுக்கு போராடிய விராட் கோலி இந்த 113* ரன்களையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் 7500 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

- Advertisement -

அத்துடன் இப்போட்டியில் அடித்த சதத்தையும் சேர்த்து பெங்களூரு அணிக்காக விராட் கோலி மொத்தம் 8 சதங்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை விராட் கோலி படத்துள்ளார். இதற்கு முன் க்ளோசெஸ்டெர்ஷைர் அணிக்காக ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளிங்கர் 7 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: இந்தியாவை மிஞ்சிய ஆர்சிபி மாபெரும் தனித்துவ உலக சாதனை.. ஆனா கோப்பை ஜெயிக்க முடியாத பரிதாபம்

மேலும் கடைசி 7 ஐபிஎல் போட்டிகளில் சேர்த்து மொத்தம் விராட் கோலி 517 ரன்கள் (100, 101*, 21, 77, 83*, 22, 113*) குவித்துள்ளார். இதன் வாயிலாக 7 தொடர்ச்சியான ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சுப்மன் கில் சாதனை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இது போக ரியன் பராக் கொடுத்த கேட்ச்சை பிடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் வாழ்நாள் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 110*
2. சுரேஷ் ரெய்னா : 109
3. கைரன் பொல்லார்ட் : 103

Advertisement