கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து ஒரு வழியாக உலகக் கோப்பையை 2019ஆம் ஆண்டு வென்றது. அப்போது நியூசிலாந்துக்கு எதிரான ஃபைனலில் பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் அந்த அணி கோப்பையை வென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் அந்த வெற்றிக்கு முக்கிய காரணமான கேப்டன் இயன் மோர்கன் இங்கிலாந்தை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அடித்து நொறுக்கும் அதிரடி அணியாக மாற்றினார்.
அந்த வேகத்திலேயே 2022 டி20 உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனையும் படைத்தது. அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னாள் நியூசிலாந்து வீரர் ப்ரெண்டன் மெக்கல்லம் – பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் 2022ஆம் ஆண்டு புதிய பயிற்சியாளர், கேப்டனாக பொறுப்பேற்றார்கள். அப்போதிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து குறைந்தபட்சம் சொந்த மண்ணில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.
டிராவிட் போல:
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செயல்படும் ப்ரெண்டன் மெக்கல்லம் 2025 முதல் இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளின் பயிற்சியாளராகவும் செயல்படுவார் என்று அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி எப்போதுமே டெஸ்ட் மற்றும் வெள்ளைப்பந்து அணிகளுக்கு தனித்தனியே பயிற்சியாளர்களை (ஸ்பிலிட் கோச்சிங்) வைத்திருப்பது வழக்கமாகும்.
ஆனால் அதை தற்போது மாற்றியுள்ள இங்கிலாந்து ப்ரெண்டன் மெக்கல்லமை முழுநேர பயிற்சியாளராக அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆதர்ட்டன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மெக்கல்லமை சுற்றி நம்முடைய வீரர்கள் இருப்பது மிகவும் முக்கியம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடர்களுக்கு பின் மார்க்கஸ் ட்ரெஸ்கோத்திக் தற்காலிக பயிற்சியாளராக செயல்படுவார்”
இந்தியா போல மாற்றம்:
“அவர் மறைமுகமாக அவ்வப்போது அடியெடுத்து வைப்பார். இந்தியா அப்படித்தான் செய்தது. சமீபகாலம் வரை ராகுல் ட்ராவிட் இரண்டையும் ஒருவராக செய்தார். அவர்கள் அணியிலும் சமீப காலங்களில் தலைமை பயிற்சியாளர்களுக்கு ஓய்வு கொடுக்கின்றனர். மற்றபடி பெரும்பாலும் ஒருவரே 2 அணிகளையும் பயிற்சியாளராக வழி நடத்தினார்”
இதையும் படிங்க: க்ரிப்டோன்ல இருந்து வந்த கோலியிடம்.. இதை செய்யக் கூடாதுன்னு எதிரணிகளே சொல்றாங்க.. ஸ்ரீதர் பேட்டி
“ப்ரெண்டன் மெக்கல்லம் திறமை மீது நான் சந்தேகப்படவில்லை. ஆனால் இந்த வேலையில் அவருக்கு எக்ஸ்ட்ரா பொறுப்பும் சவாலும் இருக்கும். குறிப்பாக திட்டங்களை வகுத்து ஒருநாள் அணியை தயார்படுத்தி விளையாட வைப்பதற்கு எக்ஸ்ட்ரா நேரம் தேவைப்படும். அதை நீங்கள் டெஸ்ட் தொடர்களின் சுற்றுப்பயணங்களில் கூட செய்யலாம்” என்று கூறினார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை போல வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் மெக்கல்லம் தலைமையில் இங்கிலாந்து வெற்றிகரமாக செயல்படும் என்று நம்புவதாக மைக்கேல் ஆத்தர்டன் கூறியது குறிப்பிடத்தக்கது.



