இப்படில்லாம் ஆடுனா இந்தியா முடிச்சு விட்ருவாங்க.. இங்கிலாந்து அணியை எச்சரித்த மைக்கேல் வாகன்

Micheal Vaughan 2
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா இரண்டாவது போட்டியில் வென்று தொடரை சமன் செய்துள்ளது. மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்த இங்கிலாந்து முதல் போட்டியில் வெற்றியும் கண்டது.

குறிப்பாக முதல் இன்னிங்ஸ் 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியாவை இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக செயல்பட்டு வீழ்த்திய இங்கிலாந்து மகத்தான வெற்றி பெற்றது. அதன் காரணமாக தொடர்ந்து தங்களுடைய பஸ்பால் ஆட்டத்தை விளையாடுவோம் என்று அறிவித்த இங்கிலாந்து இரண்டாவது போட்டியில் 399 ரன்களை துரத்தும் போது சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடாமல் அதிரடியாக விளையாட முயற்சித்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

முடிச்சு விட்ருவாங்க:
அதிலும் குறிப்பாக 11000 ரன்கள் அடித்த அனுபவம் கொண்ட ஜோ ரூட் தன்னுடைய கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் களமிறங்கியதும் தூக்கி அடிக்க முயற்சி விக்கெட்டை பரிசளித்தது இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதனால் இங்கிலாந்து அணியின் பஸ்பால் அணுகுமுறை அந்நாட்டு முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பஸ்பால் விடுமுறையை பின்பற்றி இங்கிலாந்து இத்தொடரில் தொடர்ந்து விளையாடினால் இந்தியா வென்று விடும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார். எனவே சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடி வெற்றி காணுமாறு கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி டெலிகிராப் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து அணி விமர்சிப்பதற்கு கடினமான அணியாக மாறியுள்ளது. ஏனெனில் அவர்கள் பார்ப்பதற்கு நன்றாக விளையாடுகின்றனர்”

- Advertisement -

“பென் ஸ்டோக்ஸ் தலைமையில் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் இங்கிலாந்து முன்னேறியுள்ளது. இருப்பினும் இவ்வளவு கடினமாக உழைக்கும் அவர்கள் கடைசியில் போட்டியை வெல்ல முடியாமல் சென்று விடுவார்களோ என்ற கவலை எனக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அவர்கள் வெல்ல வேண்டிய ஆஷஸ் தொடரை கடைசியில் வெல்லாமல் போனார்கள். தற்போது விராட் கோலி போன்ற வீரர்கள் வருவதற்காக காத்திருக்கும் நிலையில் இந்தியாவுக்கு எதிராக ஆரம்பத்தில் வெற்றி பெற்ற முன்னிலையை அவர்கள் நழுவ விட்டுள்ளனர்”

இதையும் படிங்க: இந்திய அணியின் வாய்ப்பை இப்படியா வீணடிப்பீங்க.. போன்ல கூட சொல்ல முடியாதா? ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

“எனவே விசாகப்பட்டினத்தில் பேட்டிங் செய்ததைப் போல் இங்கிலாந்து தொடர்ந்து விளையாடினால் இத்தொடரை வெல்ல முடியாது. குறிப்பாக 10,000 ரன்கள் அடித்த ஜோ ரூட் பஸ்பால் ஆட்டத்தை மறந்து விட்டு தன்னுடைய வழியில் விளையாட வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்த தொடரின் மூன்றாவது போட்டி வரும் பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement