இந்திய அணியின் வாய்ப்பை இப்படியா வீணடிப்பீங்க.. போன்ல கூட சொல்ல முடியாதா? ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

Aakash Chopra 2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. அதில் முதல் போட்டியில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த இந்தியா தொடரை சமன் செய்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடும் கே.எஸ். பரத் பேட்டிங்கில் பெரிய ரன்கள் அடிக்காமல் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார்.

எனவே அவரை நீக்கிவிட்டு இஷான் கிஷானை சேர்க்க இந்திய அணி நிர்வாகம் விரும்புவதாக தெரிகிறது. ஆனால் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதால் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக விடுப்பு கொடுங்கள் என்று பிசிசிஐயிடம் அனுமதி வாங்கிய இசான் கிசான் கடந்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறினார்.

- Advertisement -

போன்ல சொல்லலாம்ல:
அந்த சூழ்நிலையில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு ரஞ்சிக் கோப்பையில் விளையாடி ஃபார்முக்கு திரும்பி கம்பேக் கொடுங்கள் என்று இஷான் கிசானுக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவுரை செய்திருந்தார். ஆனால் பிப்ரவரி ஒன்பதாம் தேதி துவங்கிய ஹரியானாவுக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் தன்னுடைய மாநில அணியான ஜார்க்கண்டுக்கு விளையாடாத இசான் கிசான் பரோடாவுக்கு சென்று பாண்டியா சகோதரர்களுடன் சேர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இந்திய அணிக்கு விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தும் இஷான் கிசான் அதை மதிக்காமல் நடந்து கொள்வது ரசிகர்களிடமும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்காக விளையாட தயாராக இருக்கிறேன் என்று மொபைல் போனிலாவது தொடர்பு கொண்டு சொல்ல முடியாத அளவுக்கு இசான் கிசான் நடந்து கொள்வதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ராகுல் டிராவிட் சொன்னது முற்றிலும் உண்மை. இந்திய அணிக்கு விளையாட இசான் கிசான் முதலில் தயாராக இருக்க வேண்டும் என்று டிராவிட் சொன்னார். இரண்டாவதாக இந்திய அணிக்கு தேர்வாக அவர் ரஞ்சிக்கோப்பை போன்ற ஏதேனும் உள்ளூர் போட்டியில் விளையாடியிருக்க வேண்டும். ஒருவேளை அவர் விளையாடாமல் போனால் இந்திய அணிக்காக தேர்வாக முடியாது”

இதையும் படிங்க: 3 நூறின் நாயகன்.. உலகின் எந்த வீரரும் செய்யாத.. தனித்துவ 2 உலக சாதனை படைத்த டேவிட் வார்னர்

“ஒருவேளை இது ஜுன் – ஜூலை மாதமாக இருந்தால் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் தற்போது ரஞ்சிக் கோப்பை நடைபெற்று வருகிறது. எனவே அதில் இசான் கிசான் விளையாடி இந்தியாவுக்கு விளையாட தாம் தயாராக இருக்கிறேன் என்பதை காட்ட வேண்டும். ஆனால் அவரோ மொபைல் போனை எடுத்து இந்திய அணிக்கு தாம் விளையாட தயாராக இருக்கிறேன் என்று கூட யாரிடமும் சொல்லவில்லை” எனக் கூறினார்.

Advertisement