3 நூறின் நாயகன்.. உலகின் எந்த வீரரும் செய்யாத.. தனித்துவ 2 உலக சாதனை படைத்த டேவிட் வார்னர்

David Warner 2
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி பிப்ரவரி ஒன்பதாம் தேதி ஹோபார்ட் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 213/7 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நட்சத்திர துவக்க வீரர் டேவிட் வார்னர் அரை சதமடித்து 70 (36), ஜோஷ் இங்லிஷ் 39 (25), டிம் டேவிட் 37* (17) ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

- Advertisement -

தனித்துவ சாதனை:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 202/2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பிரண்டன் கிங் 53, ஜான்சன் சார்லஸ் 42, ஜேசன் ஹோல்டர் 34* ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா மூன்று விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

முன்னதாக 112 டெஸ்ட், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி சமீபத்தில் ஓய்வு பெற்ற டேவிட் வார்னருக்கு இப்போட்டி 100வது சர்வதேச டி20 போட்டியாக அமைந்தது. இதன் வாயிலாக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று விதமான சர்வதேச கிரிக்கெட்டிலும் தலா 100 போட்டிகள் விளையாடிய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் தன்னுடைய 100வது டெஸ்ட் மற்றும் 100வது ஒருநாள் போட்டியில் ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ள அவர் தற்போது இந்த 100வது டி20 போட்டியிலும் 76 ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 100வது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையும் டேவிட் வார்னர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் பார்முக்கு திரும்பிய ப்ரித்வி ஷா.. ரஞ்சி போட்டியில் செய்த தரமான சம்பவம் – விவரம் இதோ

அதை விட தன்னுடைய 100வது டெஸ்ட், 100வது ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே ஆட்டநாயகன் விருதை வென்றுள்ள அவர் தன்னுடைய 100வது டி20 போட்டியிலும் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 100வது டெஸ்ட், 100வது ஒருநாள், 100வது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் வீரர் என்ற மாபெரும் தனித்துவமான வரலாற்று சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். உலகில் விராட் கோலி உட்பட இதுவரை வேறு யாருமே இந்த மாதிரியான 2 சாதனைகளை படைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement