“நோ மீன்ஸ் நோ” அஜித் பாணியில் ஷாகிப்பின் தடைக்கு கருத்து சொன்ன – மைக்கல் வாஹன்

Shakib-1
- Advertisement -

பங்களாதேஷ் அணியின் கேப்டனும், முன்னணி ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் அணிக்காக 56 டெஸ்ட் போட்டிகள், 206 ஒருநாள் போட்டிகள் மற்றும் 76 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தற்போது ஐசிசியின் ஊழல் தடுப்பு நெறிமுறைகளின்படி ஓராண்டு தடை சர்வதேச போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் ஷாகிப்பின் இந்த தடைக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர். தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாஹன் தனது ட்விட்டர் பக்கத்தில் சாகிப்பின் இந்த தடை குறித்து கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது :

சாகிப்பின் மீது எந்த ஒரு சிம்பதியையும் எப்போதும் காண்பிக்கக் கூடாது என்னவாக இருந்தாலும் சரி இனி வரும் வீரர்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும். அவருக்கு இந்த தண்டனை காலம் போதாது இன்னும் தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த கருத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் கிரிக்கெட் ஒரு ஜென்டில் மேன் கேம் அதனை நேர்மையாக கையாளவேண்டும் எப்போதும் தவறான விடயத்துக்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என்றும் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அனைவராலும் மதிக்கப்படும் ஒரு பிரபலமான வீரர் இதுபோன்று செய்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் அவர் தனது தவறை ஒப்புக்கொண்டதால் ஐசிசி அவருக்கு 2 வருட தடை காலத்தில் இருந்து அதனை ஒரு வருடமாக குறைத்துள்ளது. எனவே அவர் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடைசெய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் விளையாட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement