லீட்ஸ் டெஸ்ட் தோல்வி : இந்திய அணியை யூஸ்லெஸ் என்று விமர்சித்த முன்னாள் கேப்டன் – ரசிகர்கள் கொதிப்பு

Vaughan

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி இன்று லீட்ஸ் மைதானத்தில் முடிவடைந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்களின் மோசமான செயல்பாடு இந்திய ரசிகர்களை பெரிதும் கவலை அடைய வைத்துள்ளது.

anderson 2

இந்நிலையில் தற்போது இந்திய அணியை சீண்டும் விதமாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் கடுமையான ஒரு கருத்தினை வெளியிட்டு இந்திய அணியை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் : இங்கிலாந்து இந்த போட்டியில் மிக அற்புதமாக விளையாடியது. இந்த டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றி சிறப்பான ஒரு வெற்றி.

- Advertisement -

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் இங்கிலாந்து அணி தங்களது திறமையை சரியான விதத்தில் வெளிக்காட்டி இருக்கிறது. மேலும் கேப்டன் ஜோ ரூட் அவருடைய பக்குவத்தை இந்த போட்டியில் வெளிப்பத்தியுள்ளார் என்று மைக்கல் வாகன் இங்கிலாந்து அணியை பாராட்டியுள்ளார்.

அதேவேளையில் இந்திய அணியை பற்றி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள அவர் : இந்த சில நாட்களை இந்திய அணி மறந்து தான் ஆகவேண்டும். அவர்கள் மிக யூஸ்லெஸ்ஸாக இருந்துள்ளார்கள் என்று விமர்சித்துள்ளார். அவரின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வர இந்திய அணியை தரம் தாழ்த்தி விமர்சித்த அவருக்கு எதிராக தற்போது கண்டனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

எப்பொழுதுமே இந்திய அணியை சீண்டும் வகையில் மைக்கல் வாகன் கருத்துக்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்த டெஸ்ட் போட்டியில் பெற்ற தோல்வியை கிண்டலடித்து அவர் இவ்வாறு ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement