இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. ஏற்கனவே 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்றிருந்த இந்திய அணி நடப்பு சாம்பியனாக இந்த 2026 தொடரில் பங்கேற்றதாலும் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர் என்பதனாலும் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்டது.
இந்திய அணியின் நட்சத்திர வீரரை பாராட்டிய : மைக்கல் வாகன்
அப்படி எல்லோரும் கூறியபடியே பலம் வாய்ந்த அணியாக இருந்த இந்திய அணி இந்த தொடர் முழுவதும் ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்து இறுதிவரை சென்று இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது அதோடு அடுத்தடுத்து இரண்டு உலகக் கோப்பை தொடர்களை வென்ற முதல் அணியாகவும், அதிகமுறை டி20 உலக கோப்பையை கைப்பற்றிய அணியாகவும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருந்தது.
இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடர் முடிவடைவதற்கு பிறகு இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் கலந்து கொண்ட உரையாடலில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் பங்கேற்றிருந்தார்.
அந்தவகையில் நடைபெற்ற அந்த உரையாடலில் பும்ரா போன்ற ஒரு பந்துவீச்சாளர் இங்கிலாந்து அணியில் இருந்திருந்தால் நிச்சயம் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி தான் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒருவேளை இங்கிலாந்து அணியில் பும்ரா இருந்திருந்தால் நிச்சயமாக இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி தான் கோப்பையை வென்றிருக்கும்.
இதையும் படிங்க : யுவ்ராஜ் சிங் பத்தி தோனி எப்போவுமே அப்படி சொன்னது இல்ல.. முன்னாள் தேர்வுக்குழு தலைவர் – சந்தீப் பாட்டீல்
நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்ததில் இருந்து பார்க்கையில் தலைசிறந்த பவுலர் என்று பும்ராவை கூறுவேன். ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் கூட அவர் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்துவதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவர் ரொனால்டோ, மெஸ்ஸி போல மிகவும் தனித்திறமை கொண்ட வீரர் என்றும் மைக்கல் வாகன் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.



