இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்றது. அதோடு ஏற்கனவே 2024 ஆம் ஆண்டு கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியானது இம்முறையும் கோப்பையை கைப்பற்றி அடுத்தடுத்து இரண்டு டி20 உலக கோப்பைகளை வென்ற முதல் அணியாகவும் வரலாற்று சாதனை நிகழ்த்தியிருந்தது.
தென்னாப்பிரிக்கா அணி முட்டாள் அணி : மைக்கல் வாகன்
இந்த தொடரானது முடிந்து சில நாட்கள் கடந்த வேளையில் இந்த தொடரில் தவறான முடிவுகளை எடுத்த அணிகள் குறித்தும் சில முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை தொடரில் முட்டாள் அணி என்றால் தென்னாப்பிரிக்கா அணியை தான் கூறுவேன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த தொடரில் என்னை பொறுத்த வரை தென்னாப்பிரிக்க அணி தான் முட்டாள் தனமான அணி என்று கூறுவேன். ஏனெனில் சூப்பர் 8 சுற்றின் போது தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியடைந்து இருந்தால் இந்தியா இந்த தொடரில் இருந்தே வெளியேறியிருக்கும்.
ஐ.சி.சி டி20 உலககோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் நீங்கள் வெல்ல விரும்பினால் வலிமையான அணியை ஆரம்பத்திலேயே வெளியேற்றுவதுதான் சிறந்த வழி. அப்படி தென்னாப்பிரிக்க அணிக்கு இந்திய அணியை வெளியேற்ற வாய்ப்பு இருந்தும் அவர்கள் அதனை வீணடித்து விட்டனர். அதுதான் அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு.
இதையும் படிங்க : 2026 ஐ.பி.எல் தொடரில் ஜோஷ் ஹேசல்வுட் ஆர்.சி.பி அணிக்காக விளையாடுவாரா? மாட்டாரா? – விவரம் இதோ
இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து அவர்கள் வெளியேறியதோடு மட்டுமின்றி இந்திய அணிக்கும் கோப்பையை வெல்ல வாய்ப்பு வழங்கி விட்டனர் என மைக்கல் வாகன் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



