இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19 சீசனானது எதிர்வரும் மார்ச் மாதம் இறுதியில் துவங்க இருக்கிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கும் ஆர்.சி.பி அணி தங்களது முதலாவது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியாகியிருந்து.
ஜோஷ் ஹேசல்வுட் விளையாடுவதில் சிக்கல் :
அதனைத்தொடர்ந்து இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி அணி இம்முறையும் மிகச் சிறப்பான வீரர்களை மினி ஏலத்தில் தேர்வு செய்துள்ளதால் நிச்சயம் இந்த ஆண்டும் ஆர்சிபி அணி தங்களது வெற்றி பயணத்தை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வேளையில் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட் இந்த தொடரில் முழுவதுமாக பங்கேற்க முடியாது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் பங்கேற்காத அவர் இந்த ஐபிஎல் தொடரின் முதற்கட்ட போட்டிகள் சிலவற்றை தவறவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது காயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் ஜோஷ் ஹேசல்வுட் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அந்த அணியின் மருத்துவ குழுவில் இருந்து பிட்னஸ் சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே அவர் இந்தியாவிற்கு பயணம் செய்ய முடியும்.
இதையும் படிங்க : அந்த முடிவை எடுத்தபோதே நியூசிலாந்து அணி தோத்துடுச்சி.. அரைமணி நேரத்துல எல்லாம் ஓவர் – கங்குலி கருத்து
எனவே இந்த ஆண்டு அவர் ஆரம்ப கட்ட ஐபிஎல் போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய அவர் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.



