அந்த முடிவை எடுத்தபோதே நியூசிலாந்து அணி தோத்துடுச்சி.. அரைமணி நேரத்துல எல்லாம் ஓவர் – கங்குலி கருத்து

Sourav Ganguly
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை குவிக்க பின்னர் 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 159 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

நியூசிலாந்து அணி அரைமணி நேரத்திலேயே தோற்று விட்டது : சவுரவ் கங்குலி

இந்த உலக கோப்பை தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி செய்த தவறு குறித்தும் சில முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி நியூசிலாந்து எடுத்த தவறான முடிவு குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நியூசிலாந்து அணி இந்த இறுதிப் போட்டியில் ஏழு முப்பது மணிக்கே கோப்பையை இழந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்தியா போன்ற அசுரத்தனமான பேட்டிங் யூனிட்டை கொண்டிருக்கும் ஒரு அணிக்கு எதிராக முதலில் பந்துவீச நீங்கள் எப்படி முடிவு செய்தீர்கள்?

இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய ஏன் அழைக்க வேண்டும்? 7:00 மணிக்கு துவங்கிய போட்டி 7:30 மணிக்கே இந்திய அணியின் கைவசம் வந்துவிட்டது. இந்திய பேட்டிங் யூனிட்டை பார்த்தால் முதல் எட்டு பேருமே நன்றாக பேட்டிங் விளையாடக் கூடியவர்கள். அவர்களை முதலில் பேட்டிங் செய்ய வைத்தது மிகப்பெரிய தவறு. அதுமட்டும் இன்றி அடுத்ததாக பந்து வீச்சில் பும்ரா வந்து விடுவார்.

- Advertisement -

இதையும் படிங்க : சதம் அடிக்க வேண்டும் என்று விரும்பிய பேட்டிங் கோச்.. சஞ்சு சாம்சன் கொடுத்த ரிப்ளை – விவரம் இதோ

இப்படி ஒரு பலமான அணி எதிரில் இருக்கும் போது நியூசிலாந்து அணி தான் முதலில் பேட்டிங் செய்திருக்க வேண்டும். டாசின் போது முதலில் பந்துவீச அவர்கள் எடுத்த தவறான முடிவே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கிறேன். இந்தியா போன்ற ஒரு அணியை வெல்வது என்பது மிகவும் கடினம். தற்போதுள்ள இந்திய அணியை பார்த்தால் இரண்டு தரமான அணிகளை எளிதாக உருவாக்க முடியும் என்றும் சவுரவ் கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement