டி20 உலகக்கோப்பையை ஜெயிக்க இந்த அணிக்கு தான் வாய்ப்பு அதிகம் – மைக்கல் வாகன் கணிப்பு

Vaughan
- Advertisement -

ஐசிசி நடத்தும் ஏழாவது டி20 உலக கோப்பை தொடரானது தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வர முன்னணி அணிகள் மோதும் போட்டிகள் இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கின்றன. ஏற்கனவே நடைபெற்று முடிந்த 6 டி20 உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஸ்ரீலங்கா ஆகிய அணிகள் ஒரு முறையும், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முறையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

Cup

- Advertisement -

இந்நிலையில் இந்த ஏழாவது டி20 உலகக் கோப்பை தொடரை வெல்ல போகும் அணி எது ? என்கிற எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. ஏனெனில் தற்போது அனைத்து முன்னணி அணிகளும் பலமாகவே இருப்பதால் இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற போவது யார் ? என்ற கேள்வி அதிகளவில் உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இந்த உலக கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணி குறித்து பலரும் தங்களது கருத்துக்களை அளித்து வரும் வேளையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன் இந்த டி20 உலக கோப்பை தொடரை வெல்லும் அணி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

England

இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது. ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் இல்லை என்றாலும் இங்கிலாந்து அணி வலுவாகவே இருக்கிறது. மோர்கனின் பேட்டிங் சிறப்பாக இல்லை என்றாலும் அவரது கேப்டன்சி அருமையாக உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் கடும் சவாலாக இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : அணிக்கு தேவையென்றால் டீம்ல இருந்து கூட வெளியேற நான் தயார் – சீனியர் வீரர் அதிரடி பேட்டி

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை அந்த அணிக்கு மிகவும் வாய்ப்பு குறைவு. ஏனெனில் மேக்ஸ்வெல் ஒருவர் மட்டுமே அந்த அணியின் சிறப்பாக விளையாடி வருவதாகவும் மைக்கல் வாகன் கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement