அணிக்கு தேவையென்றால் டீம்ல இருந்து கூட வெளியேற நான் தயார் – சீனியர் வீரர் அதிரடி பேட்டி

Morgan
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்ததை அடுத்து தற்போது ஐசிசி நடத்தும் ஏழாவது உலகக் கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வர இன்னும் சில தினங்களில் முன்னணி அணிகள் மோதும் முக்கிய போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த தொடரில் வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது ? என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

cup

அதன்படி முன்னணி அணிகள் ஒன்றுக்கொன்று மற்ற அணிகளுடன் சரியான போட்டியை அளிக்க காத்திருக்கின்றன. ஏற்கனவே 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி இம்முறை டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற ஒரு கண் வைத்துள்ளது. அந்த வகையில் அந்த அணியின் கேப்டனாக இயான் மோர்கன் தொடர்ந்து செயல்பட இருக்கிறார். ஆனால் தனிப்பட்ட முறையில் அவரின் 2021ஆம் ஆண்டின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது.

- Advertisement -

40 டி20 போட்டிகளில் விளையாடி 499 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். அவரின் இந்த மோசமான ஆட்டம் ஐபிஎல் தொடரிலும் எதிரொலித்தது. இதன் காரணமாக இங்கிலாந்து ரசிகர்கள் இயான் மோர்கன் அணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் தங்களது காட்டமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தனது கேப்டன் பதவி குறித்து பேசியுள்ள மோர்கன் கூறுகையில் :

Morgan

இங்கிலாந்து அணிக்கு உதவும் என்றால் நான் அணியில் இருந்து வெளியேறவும் தயார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் எப்போதும் கூறியதை போலவே இப்போதும் சொல்கிறேன் நான் அணியில் நிரந்தர வீரர் கிடையாது. அணியின் பாதையில் என்னுடைய இடம் இடையூறாக இருந்தால் நான் நிச்சயம் வெளியேற தயார். எனது கேப்டன்சி எந்த விதத்திலும் இங்கிலாந்து அணிக்கு குறைவாகவும் இருக்காது.

இதையும் படிங்க : ஜாஹீர் கான் ஜொலித்தது போல் தமிழக வீரரான இவரும் உலககோப்பையில் ஜொலிப்பார் – இர்பான் பதான் ஓபன்டாக்

ஒருவேளை என்னுடைய பேட்டிங் மோசமாக அமைந்தால் நிச்சயம் நான் அணியில் இருந்து வெளியேற கூட தயாராக இருக்கிறேன் என்று பெருந்தன்மையுடன் பேட்டியளித்துள்ளார். நடைபெற்று முடிந்த 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை மோர்கன் தலைமையில் கைப்பற்றிய இங்கிலாந்து அணி டி20 தொடரையும் அவரது தலைமையை கைப்பற்ற ஆவலுடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement