- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பென் ஸ்டோக்ஸ்ஸே ரிஷப் பண்டை பார்த்து ரசிக்குறாரு.. அந்த அளவுக்கு அசத்துறாரு – மைக்கல் வாகன் பாராட்டு

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தியிருந்தார். ஆனாலும் அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ் ரிஷப் பண்டை ரசிக்குறாரு : மைக்கல் வாகன்

இந்திய அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக இருந்தாலும் பீல்டிங் மோசமாக இருந்ததாலேயே இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியின் முதலில் 178 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 134 ரன்கள் குவித்த அவர் இரண்டாவது இன்னிங்சிலும் 140 பந்துகளை சந்தித்து 15 பௌண்டரி மற்றும் 3 சிக்சர் என 118 ரன்களு குவித்து அசத்தினார்.

- Advertisement -

ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளில் அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட் பொருத்தவரை மிகச் சிறப்பான ஆட்டத்தை ரிஷப் பண்ட் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் ரிஷப் பண்டின் பேட்டிங்கை பார்த்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரசிப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பேசியா அவர் கூறுகையில் : விளையாடு மட்டத்தில் நிறைய அறிவியல் திறன் ரிஷப் பண்டின் ஆட்டத்தில் இருக்கிறது. அவர் விளையாடும் போது எதிரணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் கூட அவரது அதிரடியான ஆட்டத்தை ரசித்து பார்ப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கில்கிரிட்ஸ்தான்.

- Advertisement -

ஆனால் அவரையே முந்தும் அளவிற்கு புதிய ட்ரெண்டை ரிஷப் பண்டை உருவாக்கியுள்ளார். ரிஷப் பண்ட் வெள்ளை பந்தின் விளையாடும் ஆட்டத்தில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை அற்புதமாக செயல்பட்டு வருகிறார் என மைக்கல் வாகன் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டீ குடிப்பதற்குள் இங்கிலாந்தை ஓட விடும்.. கோலியின் டெக்னிக்கை கில் ஃபாலோ பண்ணனும்.. மஞ்ரேக்கர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் நகரில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -