இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் அப்போட்டியில் வரலாற்றில் முதல் முறையாக 5 சதங்களை அடித்து இந்தியா அபார சாதனை படைத்தது. இருப்பினும் பேட்டிங்கில் சிறப்பாக ஃபினிஷிங் செய்யத் தவறியதும், 7 கேட்ச்களை கோட்டை விட்டதும் இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது.
முன்னதாக அந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 371 என்ற நல்ல இலக்கை இந்தியா நிர்ணயித்தது. அதனால் இந்தியா போராடி வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போது இந்திய பவுலர்கள் யாருமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதைப் பயன்படுத்திய இங்கிலாந்து ஓப்பனிங் ஜோடி 188 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியைப் பறித்தது.
டீ குடிப்பதற்குள்:
இந்நிலையில் அந்தப் போட்டியில் விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் தேனீர் இடைவேளைக்குள் இங்கிலாந்தை தெறிக்க விட்டு இந்தியாவை வெற்றி பெற வைத்திருப்பார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் தெரிவித்துள்ளார். 2021 லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் வெறும் இந்தியா வெறும் 257 ரன்களை கட்டுப்படுத்தி மிரட்டலான வெற்றி பெற்றது. குறிப்பாக தேநீர் இடைவேளை முடிந்த பின் ஆட்டம் துவங்கிய போது “அடுத்த 60 ஓவர்கள் இங்கிலாந்து நரகத்தை அனுபவிக்க வேண்டும்” என்று இந்திய வீரர்களிடம் சொன்ன விராட் கோலி உத்வேகத்தை கொடுத்தார்.
அதோடு நிற்காத அவர் அட்டாக் செய்யும் ஃபீல்டிங்கை செட்டிங் செய்து இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதே போன்ற டெக்னிக்கை சுப்மன் கில் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் மஞ்ரேக்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் மிகவும் தடுப்பாட்டமாக கேப்டன்ஷிப் செய்ததாக பலரும் கருதினார்கள்”
விராட் கோலி போல:
“உண்மையில் அவர் இங்கிலாந்து பவுண்டரிகளை அடிப்பதை நிறுத்தி விக்கெட்டுகளை எடுக்க முயற்சித்தார். இங்கே விராட் கோலியின் பெயரைக் கொண்டு வருவதை நான் வெறுக்கிறேன். ஏனெனில் கில் மிகவும் இளம் கேப்டன். ஆனால் விராட் கோலி இப்படிப்பட்ட தடுப்பாட்ட ஃபீல்டிங்கை வைத்திருக்க மாட்டார்”
இதையும் படிங்க: சி.எஸ்.கே அணிக்கு வரும் சஞ்சு சாம்சன்.. அதற்கு பதில் ராஜஸ்தான் அணிக்கு செல்லும் 2 சி.எஸ்.கே வீரர்கள் – விவரம் இதோ
“ஒருவேளை அங்கே விராட் கோலி இருந்திருந்தால் நமக்கு போதுமான ரன்கள் இருக்கிறது, இங்கிலாந்தை தேநீர் இடைவெளிக்குள் அவுட்டாக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார். அந்த முறையில் உறுதியாக விக்கெட் கிடைக்காவிட்டாலும் நிச்சயம் விராட் கோலி அதைச் செய்திருப்பார். இங்கிலாந்து அணியை போல சுப்மன் கில்லுக்கு நல்ல பவுலர்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் நீங்கள் அட்டாக் செய்யும் ஃ பீல்டிங் வைத்து பந்து வீசியிருக்க வேண்டும். அதே சமயம் கில் புதிய கேப்டன் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.



