எவ்ளோ வேகமா பந்து வீசினாலும் ஈஸியா அடிக்குறாரு – இந்திய வீரரை புகழ்ந்த மைக்கல் வாகன்

Vaughan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போட்டியின் இறுதி நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றிபெற 291 ரன்கள் தேவைப்படுகிறது. அதேபோன்று இந்திய அணியும் இங்கிலாந்தை வீழ்த்த 90 ஓவர்கள் உள்ளன. இதன் காரணமாக போட்டி இரு அணிகளுக்குமே சாதகமான நிலையில் உள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்கள் மட்டுமே அடிக்க எளிதில் இந்திய அணி வீழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Robinson

- Advertisement -

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ்சின் போது இந்திய அணி வீரர்களின் சிறப்பான ஆட்டம் காரணமாக 466 ரன்கள் குவித்தது. இதன்காரணமாக தற்போது இங்கிலாந்து அணிக்கு கடினமான ஒரு இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்களின் செயல்பாடு திருப்திகரமாக அமைந்த வேளையில் தொடக்க வீரரான ரோகித் சர்மாவை மிகவும் பாராட்டி இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : பந்துவீச்சாளர்கள் ரோஹித் சர்மாவிற்கு எதிராக எவ்வாறு பந்து வீச வேண்டும் என்ற குழப்பத்தில் இருப்பார்கள் என்று தெரிகிறது. ஏனெனில் 85 மைல் வேகத்தில் வீசப்படும் ஒரு பந்தினை கூட சுமார் மூன்று மைல் வேகத்தில் வரும் மெதுவான பந்து போல் அவ்வளவு எளிதாக ரோகித்சர்மா விளையாடுகிறார். மேலும் தேவைப்படும்போது அதிரடி ஆகவும் விளையாடுகிறார்.

Rohith-2

இந்த இன்னிங்சில் ரோகித் சர்மா 14 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 127 ரன்கள் குவித்துள்ளார். ஆண்டர்சன், ராபின்சன், வோக்ஸ், ஓவர்டன் போன்ற சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரோகித் சர்மா இவ்வாறு விளையாடியது பெரிய விஷயம். மேலும் போட்டியின் சூழ்நிலை, மைதானத்தில் தன்மை என அனைத்திற்கும் மத்தியில் அவர் விளையாடியது வேற லெவல். என்னை பொறுத்தவரை ஸ்டைலிஷான பேட்ஸ்மேன்களை பார்ப்பது எனக்கு பிடிக்கும்.

rohith 6

அந்த வகையில் ரோகித் சர்மாவின் இந்த இன்னிங்ஸ் மிகவும் ஸ்டைலிஷாக இருந்தது என்று மைக்கல் வாகன் ரோகித் சர்மாவை புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய ரோகித் 127 குவித்தார்.

Advertisement