இதான் இந்தியாவின் மாஸ்.. ஸ்ரேயாஸ்க்கே இடமில்லை.. 2026, 2027க்கு தயாராகுங்க.. எதிரணிகளுக்கு வாகன் எச்சரிக்கை

Micheal Vaughan
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் தங்களுடைய முதல் போட்டியில் குஜராத் அணியை தோற்கடித்து அசத்தியது. அந்த வெற்றிக்கு 26.75 கோடிக்கு வாங்கப்பட்ட புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார். கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் குவித்த அவர் இந்தியா கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

அதே ஃபார்மில் ஐபிஎல் தொடரையும் துவக்கியுள்ள அவர் முதல் போட்டியிலேயே சுயநலத்தைக் கருதாமல் அசத்தியது பலரது பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில் இப்படிப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதுத் தமக்கு ஆச்சரியமளிப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். அதே சமயம் இந்திய அணியில் உச்சகட்ட போட்டி நிலவுவதாலேயே அவருக்கு இடம் கிடைக்கவில்லை என்றும் வாகன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தரமான ஸ்ரேயாஸ்:

அப்படி ஸ்ரேயாஸ் போன்ற வீரருக்கே இடம் கிடைக்காத அளவுக்கு தரத்தைக் கொண்ட இந்திய அணி அடுத்த 2 ஐசிசி கோப்பைகளை வெல்வதற்கு பிரகாச வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே இந்தியாவை சமாளிக்க உலகின் மற்ற அணிகள் தயாராக இருக்க வேண்டுமென எச்சரிக்கும் வாகன் இது பற்றி பேசியது பின்வருமாறு. “முதல் பந்தை நேராக அடித்தது முதலே ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டம் சிறப்பாக இருந்தது”

“அவர் சிக்ஸர்களை மிகவும் எளிதாக காட்சிப்படுத்தினார். தமது இடுப்புக்கு நேராக வந்த ஷார்ட் பந்தை ஃபிளிக் ஷாட் வாயிலாக அவர் சிக்ஸர் அடித்ததை நான் விரும்பினேன். அதே போல ஸ்பின்னர்களையும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளையும் அவர் தமக்குத் தாமே இடைவெளி கொடுத்து சிறப்பாக எதிர்கொண்டார். அப்படிப்பட்ட இவர் இந்திய டி20 அணியில் இல்லாததை நினைத்து நான் என் தலையை சொரிந்து கொள்கிறேன்”

- Advertisement -

இந்தியாவின் மாஸ்:

“இந்தியாவின் இந்த திறமையை அறிவது உலகின் மற்ற அணிகளுக்கு கவலையைக் கொடுக்கும். 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற அவர்கள் 2023 உலகக்கோப்பை ஃபைனல் வரை சென்றனர். அடுத்த டி20 உலகக்கோப்பை எங்கே நடக்கிறது? அது இந்தியா, இலங்கையில் நடக்கிறது. அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடக்கிறது”

இதையும் படிங்க: 300 வரும்.. ஐபிஎல்ல அந்த நியாயமே இல்ல.. பேசாம கிரிக்கெட்டை இந்த பெயரில் மாத்திடுங்க.. .. ராபடா அதிருப்தி

“அங்கு நடைபெற்ற டி20 தொடரை பார்த்தேன். அதில் நிறைய சுழலுக்கு சாதகமான, ஸ்லோவான பிட்ச்கள் இருந்தன. எனவே 2027 உலகக் கோப்பை இந்தியாவுக்கு பெரிய வித்தியாசமாக இருக்காது. உலகின் மற்ற அணிகள் அதைத் துரத்தி பிடிக்க வேண்டும். அது எப்படி என்பது எனக்குத் தெரியாது. ஏனெனில் இந்தியாவிடம் இந்தளவுக்கு மாஸ் நிறைந்த 30 வீரர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். அதில் ஸ்ரேயாஸ் ஒருவராக இருப்பார்” என்று கூறினார்.

Advertisement